"நீட்": ஸ்டாலின் பாணியில்... பொன்முடி அதிரடி.. அதற்கு மேல் அன்பில் மகேஷ் சரவெடி!
சென்னை: தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்குள் நுழையாது என்று ஒருவரும் நீட் தேர்வு விலக்கு குறித்து முடிவு எடுத்த பின்னரே பிளஸ் 2 தேர்வு என்றும் இன்னொருவரும் கூறி வருவதை பார்த்து மத்திய அரசு தரப்பு ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளதாம்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் திமுக தலைவர் வித்தியாசமான தலைவராக உருவெடுத்து வருகிறார். திமுக தலைவராக தேர்வானது முதல் அவரது செயல்பாடுகளில் நல்ல மாற்றங்கள் தெரியவந்தன.
கூட்டணிக் கட்கிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதலிருந்து பதவியேற்பு நிகழ்ச்சி வரை அத்தனையையும் பார்த்து பார்த்து எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்கிறார்.

கொரோனா
முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அதிகாரிகள் அதிரடி மாற்றம், கொரோனா தடுப்பு பணிகள், அமைச்சரவை தேர்வு, தடுப்பூசிக்கு சர்வதேச நாடுகளுடன் டெண்டர் என அனைத்திலும் எதிர்க்கட்சிகள் குறையே சொல்லாதபடி சிக்ஸர் அடித்து வருகிறார் ஸ்டாலின்.

அன்பில் மகேஷ்
தமிழகத்தில் கல்வித் துறையில் முக்கிய பிரச்சினையாக இருந்து வருபவை நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவையாகும். உயர் கல்வித் துறை அமைச்சராக பொன்முடியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நியமிக்கப்பட்டனர்.

கருணாநிதி
பொன் முடி அனுபவம் வாய்ந்தவர், கருணாநிதி அமைச்சரவையில் பல துறைகளை வகித்தவர். ஆனால் அன்பில் பொய்யாமொழி இளைஞர் இவர் எப்படி தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளை கையாள்வார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு செய்த போதிலிருந்தே அவரது ஒவ்வொரு மூவும் பாராட்டும்படியாகவே இருக்கின்றன.

அன்பில் மகேஷ்
புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழையாது என அடித்து ஆணித்தரமாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அதுபோல் பிளஸ் 2 தேர்வு குறித்து ஆய்வு செய்த போது செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், நீட் தேர்வுக்கு விலகர்கு அளிக்கப்பட்ட பின்னரே தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தைரியம்
இந்த இரு அமைச்சர்களின் அறிவிப்புகளும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதற்கு காரணமாக முதலில், மக்கள் பிரச்சினைகளை தைரியமாக களைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மக்களிடம் நற்பெயரை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுபோல் மக்கள் பிரச்சினைகளை களையாத அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். தமிழக அமைச்சர்களின் இந்த அதிரடியைப் பார்த்து மத்திய அரசு கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications