''அண்ணனை பார்த்துவிட்டுத் தான் புறப்படுவோம்''.. குவியும் விசிட்டர்ஸ்.. ஜே.ஜே. வென அமைச்சர்கள் அறைகள்
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூடவுள்ளதால் அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது தலைமைச் செயலகத்தில் உள்ள தங்கள் அறைகளில் அமர்ந்து ஆய்வுக்கூட்டம், ஆலோசனைக் கூட்டம் என நடத்தி வருகின்றனர்.

அமைச்சர்களை சந்திப்பதற்காக நாள்தோறும் பொதுமக்கள், கட்சிக்காரர்கள், என பல்வேறு தரப்பினரும் கோட்டையில் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட சில அமைச்சர்களின் அறைகளுக்கு முன் தான் தவம் இருக்கின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு கோட்டையில் இருக்கிறார் என்றால் அவரது அறையை சுற்றி ஒரு பெரிய கூட்டமே அவரை சந்திக்க காத்திருக்கிறது. இதேபோல் அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி, உள்ளிட்டோரை சந்திக்கவும் கட்சியினர் உள்ளிட்ட பொதுபார்வையாளர்கள் திரள்கின்றனர்.
இதனால் குறிப்பிட்ட சில அமைச்சர்களின் அறைகள் மட்டும் திருவிழா கோலம் பூண்டு எப்போதும் ஜே.ஜே.வென காட்சியளிக்கிறது. கோரிக்கையே இல்லை என்றாலும், ''சும்மாவாவது அண்ணனை பார்த்துவிட்டு தான் புறப்படுவோம்'' என உடன்பிறப்புகள் பவர்ஃபுல் அமைச்சர்களின் உதவியாளர்களிடம் உரிமையுடன் மல்லுக்கு நிற்பதையும் காண முடிகிறது.
இதனிடையே இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் நிசப்தமான முறையில் இயங்கக் கூடிய அமைச்சர்களின் அறைகளும் கோட்டையில் உள்ளன. அமைச்சர்கள் சிவசங்கர், மெய்யநாதன், மஸ்தான், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட இன்னும் சிலரின் அறைகளில் கூட்டத்தை பார்ப்பது அபூர்வம். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஒட்டுமொத்தமாக கோட்டையில் இருப்பார்கள் என்பதால், அப்போது அவர்களை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications