கெஜ்ரிவால் போட்ட கூக்ளி.. ஒரே கல்லில் 5 மாங்காய்.. புரியாமல் திகைத்து கிடக்கும் மோடி, யோகி, அமித் ஷா
சென்னை: சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்ற வைக்கும் ஒவ்வொரு விஷயங்களும் தேசிய அரசியலில் காட்டு தீயாக மாறி உள்ளது. இப்போது மோடியின் வயது என்ற ஒரே கல்லை வைத்து பாஜகவிற்குள் 5 மாங்காய்களை அடித்து உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
50 நாட்கள் சிறையில் இருந்தபின், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் இரண்டு மாநிலங்கள் டெல்லி மற்றும் பஞ்சாப். இங்கு இருபது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு - முறையே மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்டமாக தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல்களுக்கான பிரச்சாரங்களை கெஜ்ரிவால் தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி பொதுக்கூட்டம் ஒன்றில், மோடிக்கு 73 வயதாகிறது. இந்த வருடம் 74 ஆகும். அடுத்த செப்டம்பர் 75 ஆகும். பாஜகவில் 75 வயதில் நிர்வாக பதவிகளை கொடுக்க கூடாது என்ற எழுதப்படாத விதியை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் வளைத்து உள்ளார். பிரச்சாரத்தில் அவர் பேசிய இந்த ஒரே விஷயம் பாஜகவிற்குள் 5 புயலை கிளப்பி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கெஜ்ரிவால் ஒரே கல்லில் 5 மாங்காய் அடித்துள்ளாராம் .
மாங்காய் 1: அரவிந்த் கெஜ்ரிவால் போட்ட இந்த குண்டு காரணமாக மோடி பிரதமர் ஆனால் அடுத்த வருடம் அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் வரும். இல்லையென்றால் வயதை காரணம் காட்டி ஓரம்கட்டப்பட்ட அத்வானி. முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களின் ஆதரவாளர்கள் கொதிப்பார்கள். அதோடு வயதால் ஆளுநர் பதவி முதல்வர் பதவி கிடையாது என்று ஓரம்கட்டப்பட்ட பலர் மோடிக்கு மட்டும் தனி விதியா என்று கட்சிக்கு உள்ளேயே கொதிப்பார்கள்.
மாங்காய் 2: அதோடு மோடி பதவியை விட்டுக்கொடுக்க தயங்கினால், அமித் ஷா, யோகி ஆதித்யநாத்துக்கு சிக்கல் ஆகும். அவர்கள் பிரதமர் ஆகவே முடியாது என்ற நிலை ஏற்படும். இந்த மோதலை பாஜகவிற்கு உள்ளே கெஜ்ரிவால் கிளறிவிட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யோகி ஆதரவாளர்கள் மோடி வழிவிட்டு நகர வேண்டும் என்று இப்போதே உத்தர பிரதேசத்தில் பேச தொடங்கி உள்ளனராம். பாஜக உள்ளேயே மோதலை ஏற்படுத்தும் வகையில் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தை கையில் எடுத்து உள்ளாராம்.
மாங்காய் 3: கெஜ்ரிவால் பேச்சு புயலை கிளப்பி.. ஒருவேளை பாஜகவில் ஏற்படும் உள்கட்சி அழுத்தம் காரணமாக.. மோடி ரிட்டயர் ஆனாலும் கூட.. மோடி என்ற பிரபலமான தலைவரை ஆக்டிவ் அரசியலில் இருந்து இழந்தது பாஜகவிற்கு பெரிய தோல்வி ஆக மாறும் . பாஜகவை வீழ்த்த வசதி ஆகும். ஆக மோடி விட்டுக்கொடுக்கவில்லை என்றால் கட்சிக்கு உள்ளே பிரச்சனை விட்டுக்கொடுத்தல் கட்சிக்கே பிரச்சனை என்ற நிலையை கெஜ்ரிவால் பாஜகவில் உருவாக்கி இருக்கிறாராம்.
மாங்காய் 4: பாஜகவில் இளம் தலைவர் அல்லது தங்களின் குரலை கேட்கும் தலைவரை கொண்டு வர ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறதாம். முக்கியமாக யோகியை மேலே கொண்டு வர ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் மோடி வயதை கிளறி ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு கெஜ்ரிவால் ரகசிய ஐடியாவை கொடுத்து ஆர்எஸ்எஸ் மூலம் மோடிக்கு நெருக்கடி கொடுக்க பார்க்கிறார் என்கிறார்கள்.
மாங்காய் 5: மோடியின் வயதை பற்றி பேசிய கெஜ்ரிவால் அதோடு சேர்த்து மோடி மீண்டும் பிரதமர் ஆனால் யோகி ஆதித்யநாத் உபி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கெஜ்ரிவால் கூறி உள்ளார். இதன் மூலம் யோகி பிரதமர் ஆக அடிப்போட வேண்டும் இல்லையென்றால் முதல்வர் பதவி போய்விடும் என்று கெஜ்ரிவால் ஒரு அச்சத்தில் உபி பாஜக கேம்பில் உருவாக்கி உள்ளார். இதனால் மோடி vs யோகி என்ற நிலை பாஜகவில் லேசாக தலைதூக்க தொடங்கி உள்ளதாம்.
இத்தனைக்கும் காரணமாக கெஜ்ரிவால் மோடியின் வயசை பற்றி பேசியதுதான்.. அதுதான் பாஜகவில் புயலை கிளப்பி உள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications