திமுகவிற்கு இதுவரை இல்லாத பிரஷர்! "ஆக்ரோஷமான" ரூட்டை எடுத்த பாஜக! தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு சவால்
சென்னை: ஆங்கிலத்தில் aggressive என்ற வார்த்தை பொருள்தரும் வகையில் மிக தீவிரமான அரசியல் ரூட்டை பாஜக தமிழ்நாட்டில் எடுத்துள்ளது. பாஜகவின் இந்த அதிரடி அரசியல் ரூட் திமுகவிற்கு பெரிய பிரஷராக மாறி உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் விழா இன்று அயோத்தியில் விமர்சையாக நடந்தது. இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டில் ராமர் கோவில்களில் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாக பொய்யான செய்திகள் பரவின.

நிர்மலா சீதாராமன்; கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்த விடாமல் அரசு தடுப்பதாக பாஜக விமர்சனம் வைத்தது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த புகாரில், 22 ஜனவரி அன்று நடைபெறும் அயோத்தி ராமர் மந்திர் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. HR&CE நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை.
தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன், என்று கூறியுள்ளார்.
சேகர் பாபு: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், நாளை ராமர் பெயரில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என பரப்பப்படும் வதந்திக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மறுப்பு வெளியிட்டார். அதில் ஒன்றிய அமைச்சர் என்ன கடவுளா? என்ன ஆதாரத்துடன் இத்தகைய தகவலை பரப்புகிறார்
அதில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.
முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது!, என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் நேற்று நாள் முழுக்க தேசிய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் ரவி: இதோடு நிற்காமல் இன்னொரு பக்கம் ஆளுநர் ரவி, இன்னொரு புயலை கிளப்பினார். சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலில் இன்று ஆளுநர் ஆர்என் ரவி தரிசனம் செய்தார். அப்போது கோவில் பூசாரிகள் முகத்தில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்ததாக அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் கோவில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர்.
பாஜக ஒரு அடி மேலே போனது; இது போக மேலும் ஒரு அடி போன பாஜக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக வழக்கும் தொடுத்தது . ஒரு மாநிலத்தில், நாட்டில் பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கான அனுமதியை நிராகரிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பல சமூகங்கள் வசிக்கின்றன என்பதை காரணம் காட்டி பூஜைகளை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு, பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனைகள் நடத்த தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. .
நோட்டீஸ்: இதில் முறையாக விளக்கம் அளிக்கப்படும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு அரசு கோவிலில் சிறப்பு பூஜை நடத்த தடை விதித்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சிறப்பு பூஜை, ராமர் கோவில் விழாவை ஒளிபரப்ப தடை செய்துள்ளது . அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு உத்தரவிட கோரிய பாஜக கட்சி சார்பாகவும், பாஜகவின் வினோஜ் பி செல்வம் சார்பாகவும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. தமிழ்நாடு அரசு பூஜைகளை தடை செய்துவிட்டதாக கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தேசிய அளவில் தமிழ்நாடு: இந்த மொத்த சம்பவம் குறித்து திமுக தரப்பில் விசாரித்ததற்கு.. ஆளும் திமுக அரசு மீது அபாண்டமாக பழி சுமத்தும் விதமாக இப்படி பொய்யை பரப்புகிறார்கள். இது பொய் என்று அவர்களுக்கு தெரியும். அப்படி தெரிந்தும் கூட அதை பரப்புவதே கோபம் தருகிறது.
இப்படி அரசியல் செய்து தமிழ்நாட்டில் இடம் பிடிக்க முடியாது. ஆனால் அவர்களின் நோக்கமும் அது இல்லை. தமிழ்நாட்டில் இப்படி நடக்கிறது என்று வடமாநிலங்களில் சொல்லி.. இந்திய கூட்டணி பற்றிய இமேஜை கெடுப்பார்கள். இங்கே நடக்காத விஷயங்களை நடப்பதாக பொய்யாக வடமாநிலங்களில் பரப்பி.. அங்கே வெற்றிபெற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
தமிழ்நாடு vs வடக்கு என்ற அரசியலை அவர்கள் முன்னிருத்துகிறார்கள்.. அவர்களின் இந்த செயல்களுக்கு பின் பெரிய பிளானிங் இருப்பதாகவே தோன்றுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது என்கின்றனர் திமுக வட்டாரத்தினர்.
தமிழ்நாடு மாதிரி வட மாநிலங்கள் மாறிவிட கூடாது என்ற பிரச்சாரத்தை முன் வைக்க பாஜக களமிறங்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏற்கனவே திமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து சிறைக்கு செல்லும் நிலையில்.. தற்போது திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தையும் பாஜக தீவிரமாக முன்னெடுக்க தொடங்கி உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications