மதுரையில் ராம சீனிவாசன் போட்டி!.. திருச்சி என்னாச்சு? சூர்யா சிவாவுக்கு பாஜகவில் செம மவுசுதான் போல?
சென்னை: மதுரையை சேர்ந்த ராம சீனிவாசன் திருச்சியல் போட்டியிடுவதற்கு அண்ணாமலை ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவருக்கு மதுரை நாடாளுமன்றத் தொகுதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன். இவருக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் திருச்சி சூர்யா ஐக்கியமானார். இதையடுத்து 2023 ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியுடன் சூர்யா சிவா தொலைபேசியில் உரையாடிய பேச்சு லீக்கானது.

அதில் டெய்சியை சூர்யா சிவா ஆபாசமாகவும் முக்கிய நிர்வாகிகளை அவருடன் தொடர்புப்படுத்தியும் மிகவும் கொச்சையான வார்த்தைகளால் பேசியிருந்தார். அப்போது இருவரும் வாக்குவாதம் செய்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென இருவரும் சமாதானம் ஆனார்கள்.
இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யா சிவா 6 மாதங்களுக்கு பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். இருந்தாலும் பாஜகவில் நடக்கும் உள்கட்சி விவகாரங்களை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து திருச்சி சூர்யா சிவா 6 மாதங்கள் கழித்து மீண்டும் இணைந்தார்.
இந்த நிலையில் பாஜக சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசனை களமிறக்க திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இதற்கு திருச்சியை சேர்ந்த சூர்யா சிவா எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுகுறித்து திருச்சி சூர்யா சிவா தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ராம சீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும்.
வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு திருச்சி சூர்யா சிவா தெரிவித்திருந்தார்.
இது ராம சீனிவாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் சூர்யா சிவாவின் பெயரை வெளியிடாமல் ஒரு கருத்தை பதிலடியாக பதிவிட்டிருந்தார். அதில், "அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் மண்ணுக்கான மைந்தன்" என திருச்சி சூர்யா சிவாவின் பெயரை குறிப்பிடாமல் ராம சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
யார் இந்த ராம சீனிவாசன்: பாஜகவின் ராம சீனிவாசன் மதுரையை சேர்ந்தவர். இவர் நபார்டு வங்கியின் தனி இயக்குநராகவும் இருந்து வருகிறார். மதுரையை சேர்ந்த ராம சீனிவாசன் திருச்சியில் போட்டியிட்டால் எப்படி வெல்வார் என்ற கேள்வியை சூர்யா சிவா எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய தினம் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில் ராம சீனிவாசனுக்கு மதுரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர் திருச்சி சூர்யா என்பதால் ராம சீனிவாசனுக்கு திருச்சிக்கு பதிலாக மதுரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா, இல்லை முதலிலேயே அவருக்கு மதுரை தொகுதியைதான் ஒதுக்கீடு செய்ய திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications