Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக சுதாரிக்கணுமே! "ஐடி" மூலம் அறிவாலயத்திற்கு பிரஷர் ஏற்றும் தாமரை! பாஜக எடுத்த புது ரூட் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் திமுகவிற்கு எதிராக பாஜக சார்பாக சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தீவிரமான ஐடி விங் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் 25 தொகுதியில் பாஜக போட்டி போடும் என்று திட்டமிட்டுள்ளதாம். நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இதை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

How BJP is doing an aggressive campaign against DMK in Tamil Nadu ahead of Lok Sabha elections

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும். கண்டிப்பாக இந்த முறை பாஜக மாபெரும் வெற்றியை பதிவு செய்யும். நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் என்று அறிவித்துள்ளார்.

கூட்டணி; மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணியை அறிவிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. கூட்டணி தொடர்பான முடிவுகள் எதையும் பாஜக இன்னும் எடுக்கவில்லை. ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் இதுவரை இணைந்துள்ளது.

2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய மார்ச் 18ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு இருந்ததாம். மோடி வருவதற்கு முன் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும்.. நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.

கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு இருந்ததாம். ஆனால் பாஜகவால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. கூட்டணி தலைவர்களை மோடி இருக்கும் மேடையில் ஏற்றுவேன் என்று அண்ணாமலை கொடுத்த வாக்கையும் காப்பாற்ற முடியவில்லை.

பிரச்சாரம்: இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளும் திமுகவிற்கு எதிராக பாஜக சார்பாக சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தீவிரமான ஐடி விங் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், மீம் வீடியோ, டிரெண்டிங் விஷயங்களை வைத்து திமுகவை கிண்டல் செய்வது என்று பாஜக டிரெண்டு செய்து கொண்டு இருக்கிறது. உதாரணமாக டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு உதவிய அதே டெக்னாலஜியை பாஜக தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிராக கையில் எடுத்துள்ளது.

உதாரணமாக இன்று ஆளும் திமுகவையும் - போதை பொருள் விவகாரத்தில் சாதிக் தேடப்படுவதையும் தொடர்புபடுத்தி மீம்ஸ் போட்டுள்ளனர். அதேபோல் மோடியை புகழும் வகையில் வித்தியாசமான டிரெண்டிங் வீடியோக்கள் என்று பாஜக அடித்து ஆடுகிறது.

அதிலும் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு சீன மொழியில் வாழ்த்து சொல்லும் போட்டோ, அடுத்த திமுக பொதுக்குழு பெய்ஜிங்லயாமே? உண்மையா? என்று கேட்பது , என்று பாஜக சமூக வலைத்தளங்களில் அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது.

ஆனால் திமுகவோ இதற்கான பதிலடியை கொடுக்க தொடங்கவில்லை. இளைஞர்களை களமிறக்கி டிரெண்டிங் விஷயங்களை பிடித்து பாஜக சமூக வலைத்தளங்களில் திமுகவை லீடு எடுக்க தொடங்கி உள்ளது. திமுக ஐடி சுதாரிக்குமா.. என்ன பதிலடி கொடுக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+