தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர்..பந்தயத்தில் முந்தும் நயினார் நாகேந்திரன்? கமலாலயத்தில் மாறும் கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக அடுத்த மாநில தலைவர் தொடர்பாக பேச்சுகள் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டதால், அண்ணாமலையை மாற்ற வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அந்த பார்வையை மொத்தமாக மாற்றியுள்ளது.

ஏனென்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலையும் ஒரு காரணம் என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை தரப்பில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

Nainar Nagendran Annamalai Tamilnadu BJP

அண்ணாமலை பேட்டி

அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அண்ணாமலையை மாற்ற பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. அதனை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அண்ணாமலையே உறுதி செய்துள்ளார். மாநில பாஜகவுக்கான அடுத்த தலைவருக்கான பந்தயத்தில் நான் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

3 பெயர்கள்

இதனால் அடுத்த மாநில பாஜக தலைவராக யார் பொறுப்புக்கு கொண்டு வரப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த பந்தயத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை செளந்தரராஜன் ஆகிய மூவரின் பெயர்களும் அடிபடுகின்றன. இதில் நயினார் நாகேந்திரன் பந்தயத்தில் முந்துவதாக கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரனின் பலம்

ஏனென்றால் நெல்லை மாவட்டத்தில் நயினார் நாகேந்திரனுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் சமூக பின்னணி ஆகியவை அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக கடுமையான சரிவை சந்தித்திருந்தது. அதிமுக சரிவை சந்தித்த பகுதிகளில் பாஜக கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது.

தென் மாவட்டங்கள்

இதன் மூலமாக முக்குலத்தோர் சமூக மக்களின் வாக்குகளை பாஜக பெற தொடங்கிவிட்டதாக பார்க்கப்பட்டது. இதனை அதிகரிக்கும் வகையில் நயினார் நாகேந்திரனுக்கு மாநில தலைவர் பொறுப்பு அளிக்கப்படலாம். ஏற்கனவே கொங்கு பகுதிகளில் பாஜக தரப்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் செல்வாக்கு பெற்றுள்ளனர்.

அதிமுக பின்னணி

இதன் மூலமாக பாஜகவால் 2 மண்டலங்களில் கணிசமான வாக்குகளை அறுவடை செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்த போது நயினார் நாகேந்திரன் அமைச்சராக செயல்பட்டிருக்கிறார். என்னதான் அதிமுகவில் இருந்து வெளியேறி வந்தாலும், நெல்லையில் அதிமுக தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் எப்போதும் அணுக்கமாகவே இருந்து வருகிறார்.

அதிமுக - பாஜக கூட்டணி

சட்டசபையில் கூட நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக தலைவர்களுடன் நட்பு இருக்கிறது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணியை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நயினார் நாகேந்திரனால் கொண்டு செல்ல முடியும். குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களையும் பாஜகவாலும் சொந்தம் கொண்டாட முடியும்.

முந்தும் நயினார் நாகேந்திரன்

ஆனால் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரால் ஒரு பகுதியில் முழுமையாக செல்வாக்கு பெறுவது கடினமான விஷயம். சில மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்தாலும், தென் மாவட்டங்கள் முழுக்க நயினார் நாகேந்தரனால் பாஜகவை வேகமாக வளர்க்க முடியும் என்பதால், அடுத்த மாநில தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன் முந்துவதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+