இரண்டே நாளில் கபினி அணை எப்படி நிரம்பியது! கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? சிபிஎம் சண்முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கபினி அணை எப்படி இரண்டு நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து இன்று வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.

Kabini dam

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, "கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்" என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.

இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பந்த் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். அதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி இந்த போராட்டம் கர்நாடகாவில் நடத்த கன்னட கூட்டமைபபின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தால் பெங்களூருக்கு ஆகஸ்ட் 3இல் விஜய் வரும் போது விமான நிலையம் முற்றுகையிடப்படும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையொட்டிதான் விஜய் இப்போது கர்நாடகாவுக்கு வரவேண்டாம் என டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதாவது 15 நாட்களுக்கு திநமும் 3500 கனஅடி நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்க மறுத்து கன்னட அமைப்பினர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகா முழுவதும் பந்த் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த பந்தை கைவிட வேண்டும் என நேற்றைய தினம் கர்நாடகா மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில் கபினி அணையின் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி கபினியில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஹாரங்கி அணையின் அதிகபட்ச நீரின் அளவு 129 அடி. தற்போது 127.55 அடி நீர் உள்ளது. ஹேமாவதி அணையின் அதிகபட்ச நீரின் அளவு 117 அடி. தற்போது 100.98 அடி நீர் உள்ளது.

கபினி அணையின் அதிகபட்ச நீரின் அளவு 65 அடி. தற்போது 56.28 அடி நீர் உள்ளது. கேஆர்எஸ் அணையின் அதிகபட்ச நீரின் அளவு 124.8 அடி. தற்போது 91.8 அடி நீர் உள்ளது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்து வரும் நிலையில் அங்கு பெய்யும் கனமழையால் அணைகளின் கரை உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் என கருதி நேற்றைய தினம் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது கர்நாடகாவிற்கு வெள்ள நீரால் அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்பதற்காக திறந்துவிடப்பட்டதே தவிர, இவர்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை மதித்து திறந்துவிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+