SBI இல் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு 11 லட்சம் லாபம்.. முதல் ஆண்டில் செய்ய வேண்டிய சின்ன மாற்றம்
சென்னை: இந்தியாவை பொறுத்தவரை பலர் வீட்டுக்கடனை வாங்கி கொண்டு அடைக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். 10 அல்லது 15 வருடங்கள் கழித்து போய் கடனை அடைக்க வங்கிகளை கேட்கும் போது, அங்கே கடன் தொகை பெரிய அளவில் குறைந்திருக்காது. அசல் தொகை அப்படியே தான் இருக்கும். பெரும் தொகையாக வட்டி தான் பல வருடங்களாக கட்டியிருப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் வீட்டுக்கடனை விரைவாக அடைக்க என்ன வழிகள் உள்ளது.முதல் ஆண்டு ஏன் மிக முக்கியம் என்பதை பார்ப்போம்.
எஸ்பிஐ, எல்ஐசி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி என பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக்கடன் வட்டி 7.5 சதவீதம் முதல் 8 சதவீதமாக இருக்கிறது. இப்படியான சூழலில் வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டியவர்கள் கடனை அடைக்க 20 வருடங்கள் அல்லது 25 வருடங்கள் காத்திருப்பார்கள்.அவர்கள் வட்டியாக பல லட்சத்தை செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

ஆனால் அதேநேர மாதாந்திர இஎம்ஐ தொகையைவிட முடிந்தபோதெல்லாம் கூடுதல் தொகையை கடன் வாங்கிய முதல் ஆண்டில் இருந்தே செலுத்தினால் மிகப்பெரிய அளவில் கடன் தொகை குறையும். போனஸ், ஆண்டு ஊதிய உயர்வு அல்லது எதிர்பாராத வருமானம் போன்ற காலக்கட்டத்தில் நகை எடுப்பதற்கு பதில் அல்லது வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவதற்கு பதில், புத்திசாலித்தனமாக கடனை அடைக்க முதலீடு செய்யலாம். இப்படி செய்தால் கடன் விரைவாக குறையும்.
நாம் ஒரு கணக்கீடு இது தொடர்பாக பார்ப்போம்.
ரூ. 36,48,000 வீட்டுக்கடனுக்கு, 8% வட்டி விகிதத்தில், ரூ. 30,550 மாத இ.எம்.ஐ 20 ஆண்டுகளுக்கு செலுத்தினால், கடன் காலம் எவ்வாறு குறையும் மற்றும் வட்டி எவ்வளவு சேமிக்கப்படும் என்பதை பார்ப்போம். இந்தக் கணக்கீடு, இ.எம்.ஐ தொகை மாறாமல், ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் கூடுதலாகச் செலுத்தும் ஒரு லட்சம் ரூபாயின் தாக்கத்தை பற்றி பார்ப்போம்.
கடன் தொகை ரூ. 36,48,000
வட்டி விகிதம் 8%
மாதாந்திர இ.எம்.ஐ ( ரூ. 30,550
கடன் காலம் 20 ஆண்டுகள் ( அதாவது 240 மாதங்கள்)
மொத்தமாக நீங்கள் செலுத்தும் தொகை ; 73,32,000
இதில் ஏற்கனவே வாங்கிய கடன் : ரூ. 36,48,000
வட்டி எவ்வளவு: 73,32,000 -36,48,000 :36,84,000 ரூபாய்
அதாவது வட்டியாக மட்டுமே 20 ஆண்டு முடிவில் 36 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் கட்டியிருப்பீர்கள்
ஆனால் முதல் ஆண்டில் இருந்தே ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு லட்சம் பணத்தை கட்டினால் அசல் மற்றும் வட்டி எவ்வளவு குறையும் என்பதை பார்ப்போம்.
கடன் காலம் 20 ஆண்டுகள்
ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கட்டி வந்தால் : சுமார் 14 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்களில் உங்கள் மொத்த கடனும் முடிந்துவிடும்.
நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கட்டி வந்தால், உங்களுக்கு அப்படியே 61 இஎம்ஐ குறைந்துவிடும்.
20 ஆண்டு நீங்கள் அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் கட்டினால் ரூ. 36,84,000 வட்டியாக செலுத்தி இருப்பீர்கள். ஆனால் ஒரு லட்சம் முதல் ஆண்டில் இருந்தே கூடுதலாக செலுத்துவதன் மூலம் ரூ. 11,20,000 வட்டியை சேமிக்க முடியும். கடனும் விரைவாக அடைந்துவிடும். இது தோராயமான கணக்கு தான், முழுமையான கணக்கு மற்றும் வட்டி விகித குறைப்பு பற்றி அறிய வங்கி அதிகாரியிடம் கேளுங்கள்.
குறிப்பு: நிதி தொடர்பான முடிவுகளை சரியான பொருளாதார ஆலோசகரிடம் அல்லது நீங்களே முடிவெடுங்கள். யூடியூப், பேஸ்புக் மற்றும் இணையதளங்களில் வரும் தகவல்களை அப்படியே கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். ஏனெனில் ஆசை வார்த்தைகளை நம்பி முடிவெடுத்து ஏமாற வேண்டாம்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications