பார்க்க என்னை மாதிரியே இல்லையே! ஆதாரில் போட்டோ சரியில்லையா? இனி மாற்றுவது ரொம்ப ஈஸி.. இதை படிங்க

இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது மிகவும் எளிதான காரியம் ஆகும். உங்கள் ஆதார் கார்டில் பழைய போட்டோ இருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் எளிதாக சில ஸ்டெப்களில் மாற்ற முடியும்.

ஆதார் கார்ட் இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்ட் அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியமாகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்ட் என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும். லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான் கார்ட் அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது. இதில் தற்போது ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் ஆகிறது.

இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் உங்களின் சிறிய வயது போட்டோக்கள் இருந்தால் அல்லது போட்டோக்கள் தெளிவாக இல்லை என்றால் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.

UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக புகைப்படத்தை மாற்ற முடியும்.

 How can we change our old pics or not so good photo in Aadhaar card - Easy Method

1. ஆதார் புதுப்பிப்பு படிவத்தை தரவிறக்கவும். இது UIDAI இணையதளத்தில் இருந்து தரவிறக்க முடியும். எந்த ஆதார் பதிவு மையத்திலும் நேரடியாக சென்று வாங்கிக்கொள்ளலாம்.

2. படிவத்தை பூர்த்தி செய்யவும்.

3. படிவத்துடன் மையத்திற்குச் சென்று, அதைச் சமர்ப்பித்து, கைரேகைகள் மற்றும் கருவிழிப் பிடிப்பு போன்ற பயோமெட்ரிக் விவரங்களை கொடுக்கவும்.

4. அங்கே இருக்கும் கேமராவில் உங்கள் புகைப்படம் எடுக்கப்படும். இதற்கு 100 ரூபாய் மட்டும் கொடுக்க வேண்டும். இதற்காக உங்களிடம் ஒரு ஸ்லிப் கொடுக்கப்படும். அதில் Update Request Number (URN) இருக்கும்.

5. உங்கள் போட்டோ நீண்ட நாட்கள் ஆகியும் மாறவில்லை என்றால் இந்த Update Request Number (URN) எண்ணை வைத்து விசாரிக்கலாம்.

6. உங்கள் போட்டோ அப்டேட் ஆக 90 நாட்கள் ஆகும். ஆனால் பொதுவாக 2 வாரத்திற்கு உள்ளாகவே போட்டோ மாறிவிடும்.

ஆதார் அட்டை அப்டேட் ஆன பின் உங்களுக்கு அதை பற்றிய மெசேஜ் வரும். அதன்பின் அந்த அட்டையை நீங்கள் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

 How can we change our old pics or not so good photo in Aadhaar card - Easy Method

1.UIDAI அதிகாரப்பூர்வ இணையதளமான www.uidai.gov.in க்குச் சென்று, 'ஆதாரைப் பதிவிறக்கு' என்பதைக் கிளிக் செய்து டவுன் லோட் செய்ய முடியும்.

2. அந்த பக்கத்தில் ஆதார் எண் அல்லது, பதிவு ஐடி அல்லது விர்ச்சுவல் ஐடியை கொடுக்க வேண்டும்.

3. அப்படி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு ஓடிபி வரும். அதை கொடுத்தால் ஒரு பக்கம் திறக்கும்.

4. இந்த பக்கத்தில் OTP ஐ உள்ளிட்டு 'சரிபார்த்து பதிவிறக்கு' என்பதைக் கிளிக் செய்யவும். உடனே உங்கள் புதிய போட்டோ கொண்ட ஆதார் கார்ட் டவுன்லோட் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+