கலைஞர் மகளிர் உரிமை தொகை.. வெறும் ரூ.1000 அல்ல.. அதுக்கு மேலேயும் கிடைக்கும்.. எப்படி பெறுவது?
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 பணத்தை வைத்து நீங்கள் கூடுதல் லாபம் பெற முடியும். அதை எப்படி பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.
இந்த 1000 ரூபாய் உங்களுக்கு குட்டி போட போகிறது.. ஆம் குறிப்பிட்ட வங்கியில் சேமித்தால் அதற்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. அதாவது இந்த தொகைக்கு என்று கூடுதலாக வட்டி கொடுக்கும் நிறைய திட்டங்கள் உள்ளன.

பொதுவாக வங்கியில் பணம் சேமிக்க 3-4 சதவிகிதம் மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 7.5 சதவிகிதம் வரை வட்டி பெறலாம். 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் பணம் சேர்க்க முடியும். தமிழ்நாடு அரசு இதற்காக மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் கூட்டுறவு வங்கி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
நீலகிரியில் தொடங்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இதில் இணைந்தால் மகளிர் உரிமைத்தொகை பணத்திற்கு மட்டும் 7.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். சாதாரணமாக வழங்கப்படும் 3-4 சதவிகிதம் வட்டிக்கு பதிலாக இந்த கூடுதல் வட்டி இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தை நீலகிரி கூட்டுறவு வங்கி வழங்குகிறது.
விரிவாக்கம்: தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பின்பும் நீங்கள் அதில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.
வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை. பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படாது.
மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த 4 மாதங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திட்ட விரிவாக்கம்; இரண்டு நாட்களுக்கு முன் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது .
கடந்த மாதம் வரை 1.15 கோடி பேர், மகளிர் உரிமைத்தொகை பெற்றனர்; தற்போது மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை தரப்பட்டுள்ளது.
மேலும் விரிவாக்கம்: இதை மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பிடம் விசாரித்த போது, இனி அடுத்த வருடம் மீண்டும் இந்த திட்டம் விரிவாக்கப்படும். அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் வரும் வருடங்களில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் புதிய பயனாளிகள் கண்டிப்பாக இணைக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்து உள்ளனர். 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.












Click it and Unblock the Notifications