அஜித் குமார்.. இந்த முடிச்சை அவிழ்த்தால்.. கேஸ் க்ளோஸ்.. நிகிதா பக்கம் கவனத்தை திருப்பும் சிபிஐ?
சென்னை: இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐ கைக்கு சென்றுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ முக்கியமான பல முடிச்சுகளை அவிழ்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக நிகிதா தொடர்பான பின்னணி சிபிஐ விசாரணையில் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. சிபிஐ விசாரணையில், போலீசார் மேற்கொண்ட விசாரணை, வீடியோ ஆதாரங்கள், போலீசார் செய்த கொடுமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் ஆய்வு செய்யப்படும். விசாரணை முடிவில் போலீசாருக்கு தண்டனை பெற்றுத்தருவதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு வலுவாக்கப்படும்.

2.முக்கியமாக இதில் சிசிடிவி ஆதாரங்கள் போலீஸ் மீதான குற்றத்தை உறுதி செய்யும். சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரிக்கப்படும். இதில் சிசிடிவி ஆதாரங்கள்தான் வழக்கின் முடிவை இறுதி செய்யும்.
3. இரண்டாவதாக.. அந்த இளைஞர் அஜித் குமாரை கொலை செய்யும் அளவிற்கு போலீசாருக்கு பிரஷர் கொடுத்தது யார் என்ற விசாரணை விரைவில் தொடங்கப்படும். சிபிஐ பெரும்பாலும் அந்த பின்னால் உள்ள புள்ளியை பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தும் என்று கூறப்படுகிறது.
4. காவல் துறையினர் ஏன் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை செய்யாமல் தனி இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்? என்ற கேள்வி உள்ளது. இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும்.
5. யார் அழுத்தத்தின் பெயரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 30 கி.மீ தொலைவில் இருந்து சீருடை அணியாமல் போலீஸ் ஏன் விசாரணைக்கு வந்தது? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அந்த அளவிற்கு என்ன அவசரம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
6. ஒரு திருட்டு வழக்கிற்கு இவ்வளவு தூரம் போலீஸ் வந்தது எப்படி? இதில் அடிபடும் ஐஏஎஸ் அதிகாரி யார்? என்றெல்லாம் கேள்விகள் தீவிரமாக உலவி வருகின்றனர். இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டிய கட்டாயம் சிபிஐக்கு உள்ளது.
7. நிகிதாவின் பின்னணியை சிபிஐ அவிழ்க்கும் என்றும் கூறப்படுகிறது. திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. "2010இல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும்" என்று கூறி நிகிதா மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
8. நிகிதா இதில் முன்னுக்கு பின் முரணான வாக்குமூலங்களை கொடுத்து வருகிறார். முதலில் ஸ்கேன் எடுக்க போனோம், பின்னர் போகவில்லை என்றெல்லாம் மாற்றி மாற்றி பேசினார்.
7. தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தாய்க்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோவிலுக்கு சென்றபோதுதான் நகை திருட்டு புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது. மதுராபுரம் கோவிலில் தனது அம்மாவிற்கு சக்கர நாற்காலி (வீல் சேர்) வேண்டும் என்று நிகிதா கேட்டதற்கு, காவலாளி அஜித் குமார் ரூ.500 கேட்டுள்ளார். அதற்கு ரூ.100 தருவேன் என்று நிகிதா கூறிய நிலையில் அது வாக்குவாதம் ஆகி, இதனால் கோபம் அடைந்த நிகிதா நகை காணவில்லை என்று பொய் வழக்கு போட்டதாகக் கூறப்படுகிறது.
7. நகை திரட்டுக்காக உண்மையில் புகார் கொடுத்தாரா.. அல்லது 500 ரூபாய் சண்டைக்காக புகார் கொடுத்தாரா என்ற கேள்விகள் உள்ளன.
8. இவர் திருமங்கலம், கல்லிகுடி மற்றும் பல பகுதிகளில் உள்ள பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் வசூலித்து வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக 10.5.2011 அன்று திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயபெருமாள், தாய் சிவகாமி, சகோதரர் கவியரசு மற்றும் நிகிதா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கில் நிகிதாவின் தொடர்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவரை முழுமையாக சிபிஐ விசாரித்தால் வழக்கில் பெரிய திருப்பம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications