தனிப்படை இருந்தும் கோட்டைவிட்ட தமிழக அரசு! மத்திய படைகள் கையில் சிக்கும் போதைப்பொருள்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் போதைபொருட்களை கிலோ கணக்கில் மத்திய புலனாய்வு அமைப்புகள் அடுத்தடுத்து கைப்பற்றி வருகின்றன. இதில் தமிழக அரசின் ஸ்பெஷல் பிரிவு போலீசார் கடுமையாக சொதப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த விஜய் தலைமையிலான தமிழக அரசு, இதற்கு என்றே ஸ்பெஷல் காவல் படையையும் உருவாக்கி உள்ளது. ஆனால், கடந்த ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாட்டில் பிடிபட்ட இரண்டு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களையும் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பே கண்டுபிடித்துள்ளது.

tvk vijay

இதனால், தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புத் தனிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரூ.264 கோடியில் உருவாக்கப்பட்ட தனிப்படை

கடந்த ஆகஸ்ட் மாதம், போதைப்பொருள் தடுப்புக்காக 65 சிறப்புப் பிரிவு காவல் நிலையங்களை அமைக்க ரூ.264 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதற்காக 1,300-க்கும் மேற்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் போதைப்பொருள் தடுப்புப் பணியைத் தவிர வேறு எந்தப் பணியும் வழங்கக் கூடாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது.

இவ்வளவு பெரிய கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகும், மாநிலத்தின் உள்ளே நடக்கும் பிரம்மாண்ட போதைப்பொருள் கடத்தல்களைத் தமிழக காவல்துறையால் முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை என்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சென்னையில் ஐஸ்கிரீம் வேனில் 71 கிலோ ஹெராயின்

நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், சென்னை மாதவரம் பகுதியில் ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஐஸ்கிரீம் கொண்டு செல்லும் வேன் ஒன்றின் குளிர்பதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 பொட்டலங்களில் இருந்து 71.24 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே ஒரே நடவடிக்கையில் பிடிபட்ட மிகப்பெரிய ஹெராயின் வேட்டை இதுவாகும். இந்தச் சரக்கு சென்னையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்ததும், இதில் தொடர்புடைய அப்துல் சுக்கூர் மற்றும் ஷபீக் அகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

நாகையில் 137 கிலோ கிரிஸ்டல் மெத்

சென்னை சம்பவம் நடப்பதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, அதாவது அக்டோபர் 16-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கடற்கரை கிராமத்தில் ஒன்றிய அரசின் டி.ஆர்.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அங்கு 6 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 137 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கைக்குக் கடத்தத் தயாராக இருந்த இந்தப் போதைப்பொருள் வழக்கில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் பூபாலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் பூபாலன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், ஆளுங்கட்சி நிர்வாகியே கடத்தலில் சிக்கியது மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

தமிழக காவல்துறை கோட்டைவிட்டது எங்கே?

இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. பல நூறு கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் தமிழ்நாட்டின் சாலைகள் வழியாகப் பயணப்பட்டு, கடற்கரை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆனால், மாநில உளவுத்துறையோ அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட 65 போதைப்பொருள் தடுப்புத் தனிப்படைகளோ இதனைக் கடைசிவரை மோப்பம் பிடிக்கவில்லை.

டெல்லியில் இருந்து செயல்படும் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த இரு கடத்தல்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளின் சரமாரி கேள்வி

இதனைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், "உள்துறையைத் தன்வசம் வைத்துள்ள விஜய், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பதுடன் நின்றுவிட்டார.. களத்தில் 65 தனிப்படைகள் இருந்தும் எந்தப் பயனும் இல்லை" எனக் கடுமையாகச் சாடி வருகின்றனர். சாதாரண சில்லறை விற்பனையாளர்களைப் பிடிப்பதைத் தாண்டி, கடல் வழியாக நடக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பல்களைத் தடுப்பதில் தமிழக காவல்துறை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+