"ரூ.1000 கோடி!" சென்னை மாநகராட்சிக்கு மெகா இழப்பு! இதை இன்னுமா சரி செய்யல! முக்கியம் நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி சுமார் 1000 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து வருவதாக இப்போது பரபர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பல்வேறு முறையில் ஏகப்பட்ட வருவாயை ஈட்ட முடியும். சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பல முக்கிய இடங்களில் விளம்பரம் மூலமே அதிகம் சம்பாதிக்கலாம்.

 How Chennai Corporation is losing Rs 1,000 crore on various income

இருப்பினும், பல்வேறு காரணங்களால் கடந்த சில காலமாகவே இதுபோல ஈட்டப்படும் வருவாய் என்பது குறைந்தே இருந்தது. இது அனைவருக்கும் தெரியும் என்ற போதிலும், இதைச் சரி செய்ய இத்தனை காலமாகப் பெரிய நடவடிக்கை இல்லாமல் இருந்தது.

வருவாய்: சென்னை மாநகராட்சி பார்க்கிங், விளம்பரங்கள் மற்றும் சொத்து மதிப்பீடு போன்ற வருவாய் கிடைக்கும் விஷயங்களை முறையாகச் செயல்படுத்தத் தவறியுள்ளது. இதன் காரணமாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆண்டுதோறும் ரூ.600 கோடி வரை வருவாயை இழக்கிறது.. மேலும், உரிய முறையில் சொத்து வரி வசூலிக்காமல் விடுவதால் கூடுதலாக ரூ.450 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

கடந்தாண்டு தான் இதைப் புரிந்து கொண்ட மாநகராட்சி, கூடுதல் வருவாயைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஏதீனா இன்போனோமிக்ஸ் என்ற கண்டிராக்டருடன் ஒப்பந்தம் மேற்கொண்டனர். நிறுவனம் அளித்த முதல் பரிந்துரையே பார்கிங் தான்.. பார்கிங் மூலம் கிடைக்கும் பெருந்தொகையைச் சென்னை மாநகராட்சி இழந்து வருவதை அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி ஏற்கனவே பார்கிங் மையங்களை அடையாளம் காணும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஏற்கனவே இறங்கிவிட்டது.

விளம்பரங்கள்: அடுத்து தெருவிளக்குகள், பேருந்து நிலையங்களில் விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பரங்கள் மூலம் அதிக வருவாயைப் பெறலாம் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், குறைவான மதிப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களை மறு மதிப்பீடு செய்து அதற்கேற்ப சொத்து வரி வசூலிக்கும் நடவடிக்கையிலும் இறங்க வேண்டும் என்பதை அந்த நிறுவனம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைகள் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.

மேலும், சென்னையில் இருக்கும் 1,850 பேருந்து நிழற்குடைகளில் 650இல் இருந்து மட்டுமே விளம்பர வருவாய் கிடைக்கிறது. மற்ற நிழற்குடைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அதில் விளம்பரப்படுத்தி யாரும் முன்வரவில்லை. ஒரு பேருந்து நிழற்குடையில் இருந்து காண்டிராக்டர் 5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் போதிலும், அவர் அரசுக்கு 2.5 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான நிழற்கூடைகள் மோசமாக இருப்பதால் அங்கிருந்து மாநகராட்சியால் வருவாய் வசூலிக்க முடிவதில்லை.

பார்கிங்: அதேபோல 12,000 ஸ்மார்ட் சிட்டி பார்க்கிங்கிற்கும் இதே நிலைதான், அங்கு ஒப்பந்ததாரர் கட்டணம் வசூலிக்க போதுமான பணியாளர்களை நியமிக்கவில்லை. இதனால் பார்கிங் மூலம் ரூ. 11 லட்சம் வருவாய் ஈட்ட வேண்டும் என்ற இலக்கிற்குப் பதிலாகத் தினசரி ரூ. 1 லட்சம் மட்டுமே வசூலிக்க முடிகிறது. சட்டவிரோத வாகன நிறுத்தத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதில் இருந்து உரியத் தொகையை வசூலிக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகையில், "சென்னை மாநகராட்சியால் அதன் சொந்த சொத்துகளில் இருந்தே போதிய வருவாயைப் பெற முடிவதில்லை. பார்க்கிங்கும் சரி, பேருந்து நிறுத்துமிடத்தின் மூலம் கிடைக்கும் விளம்பரங்களும் சரி ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே சாதமாகவே உள்ளதே தவிர மாநகராட்சிக்குச் சாதமாகவே இல்லை. இதை மாநகராட்சியே நேரடியாகப் பராமரிக்க முடியும். அப்படி இருக்க இங்கே தனியாரைக் கொண்டு வருவது ஏன்" எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

1000 கோடி இழப்பு: தெருவிளக்குகள் மீதான விளம்பரங்கள், சொத்து ஆகியவற்றில் இருந்தும் சுமார் ரூ.100 கோடி வருவாய் பாதிக்கப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பல்வேறு வழிகளில் கிடைக்கும் சுமார் 1000 கோடி ரூபாய் வருவாயைச் சென்னை மாநகராட்சி தொடர்ந்து இழந்து வருகிறது. இதனால் மாநகராட்சியில் எடுக்கப்படும் வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் இப்போது இந்த பிரச்சினையைச் சரி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சொத்து வரி வசூல் ஏற்கனவே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மீதமுள்ள 1,250 நிழற்குடைகளில் இருந்து வருவாய் பெறும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோக மற்ற வழிகள் வழியாக வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையிலும் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+