ஜெயலலிதா சிறுக சிறுக கட்டிய கோட்டையில்.. அசால்ட்டாக குடியேறிய ஸ்டாலின்.. அலறும் அதிமுக தலைகள்!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தரப்பு அதிமுகவின் முக்கியமான வாக்கு வங்கியை காலி செய்வதற்கான பணிகளை செய்து வருகிறதாம்.
லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதிமுக இன்னும் கூட்டணி எதையும் அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக பெரும்பாலும் கூட்டணியை 10 நாட்களில் இறுதி செய்துவிடும்.. பழைய கூட்டணியே இந்த முறை இந்தியா கூட்டணி என்ற பெயரில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மற்ற கட்சிகளுக்கு 1-2 இடங்களை மட்டுமே கொடுக்கலாம் என்ற திட்டத்தில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் ஸ்டாலின் முக்கியமான பிளான் ஒன்றை போட்டுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திமுக திட்டம்: முக்கியமாக பெண்கள் வாக்குகளை திமுக குறி வைக்கிறது. திமுக பெண்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
உரிமை தொகை திட்டம், இலவச பேருந்து பயணம் தொடங்கி புதுமை பெண் திட்டம் வரை பலருக்கு உதவிகளை செய்துள்ளனர். இவர்களை டார்கெட் செய்கின்றனர். இந்த ஒன்றரை கோடி பேரை திமுகவினர் டார்கெட் செய்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவிற்கு பெண்கள் ஆதரவு அதிகம் இருந்தது.
இந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக தற்போது திமுக பக்கம் சென்று உள்ளது. உரிமை தொகை திட்டம், இலவச பேருந்து பயணம் தொடங்கி புதுமை பெண் திட்டம் வரை பல திட்டங்களால் பெண்கள் திமுக பக்கம் சாய தொடங்கி உள்ளன.
முக்கியமாக அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்ததில் இருந்தே வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. லோக்சபா தேர்தல் தோல்வி , இடைத்தேர்தல் தோல்விகள், சட்டசபை தோல்வி, உள்ளாட்சி, நகராட்சி தோல்வி என்று வரிசையாக தோல்விகளை சந்தித்தது.
குறைந்த பெண்கள் சப்போர்ட் : கட்சியின் தோல்விக்கு இரட்டை தலைமையும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனபின் மிகப்பெரிய மாநாட்டை முதல் கட்டமாக மதுரையில் நடத்தினார்.
ஆனால் அதிமுக கூட்டத்தில் பெண்கள் சொற்ப அளவிலேயே கலந்து கொண்டனர். 10 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே பெண்கள் கலந்து கொண்டனர். ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் பெண்கள் அதிகம் இருப்பார்கள். ஜெயலலிதா செல்லும் இடமெல்லாம் பெண்கள் இருப்பார்கள். கட்சி பொதுக்கூட்டங்களில் பாதிக்கு பாதி பெண்கள் கூட்டம் இருக்கும். ஜெயலலிதாவிற்கு என்று பெண்கள் பிரபலம் அதிகம் இருந்தது. பெண்களை வைத்தே பல முறை ஜெயலலிதா போராட்டங்களை மேற்கொண்டு இருக்கிறார். பெண்கள் வாக்குகளும் அதிமுகவிற்கு தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உதவியது.
இப்போது பெண்கள் ஆதரவு இல்லாதது அதிமுகவிற்கு சரிவை கொடுக்க தொடங்கி உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்த பெண்கள் வாக்குகளை திமுக அள்ளும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications