பல்லாயிரம் கோடி இழப்பு.. பாதாளத்திற்கு செல்லும் தமிழ்நாடு.. விஜய்யின் பரந்தூர் முடிவு ஏன் தவறானது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் இரண்டாவது சர்வதேச பசுமை விமான நிலையத் திட்டமான பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகக் கைவிடுவதாக முதல்வர் விஜய் கடந்த வாரம் சட்டசபையில் அறிவித்துள்ளார். நிதி அனுமதி, 90% நில கையெடுத்து, முதலீட்டு வரைவுகள், முதற்கட்ட அனுமதிகள் என அனைத்தும் இறுதி செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான காத்திருந்த இந்த மெகா திட்டம் இப்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று அரசு விளக்கம் அளித்திருந்தாலும், இந்த ஒற்றை முடிவால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொருளாதார நிபுணர்கள் தீவிர கவலைகளை முன்வைக்கின்றனர்.

parandur vijay

கைநழுவிய ரூ.27,000 கோடி

பரந்தூர் விமான நிலையம் என்பது வெறும் ஓடுதளங்களும் முனையங்களும் மட்டுமே கொண்ட ஒரு சாதாரணத் திட்டம் அல்ல. சுமார் ரூ.27,000 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட இந்த மெகா கட்டமைப்பு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக, ஒரு சர்வதேச விமான நிலையம் அமையும்போது அதைச் சுற்றி ஏரோசிட்டி எனப்படும் பிரம்மாண்ட பொருளாதார மண்டலம் தானாகவே உருவாகும். ஹோட்டல்கள், பன்னாட்டு மாநாட்டு மையங்கள், வர்த்தக அலுவலகங்கள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கிடங்கு பூங்காக்கள் என மிகப்பெரிய அளவிலான புதிய முதலீடுகள் திரளும்.

பூந்தமல்லியிலிருந்து பரந்தூர் வரை ரூ.10,700 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் இணைப்பு, தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு மற்றும் நவீன உள்கட்டமைப்புடன் ஒரு புதிய துணை நகரமே உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம், பல லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான வாய்ப்பு தற்போது முடங்கியுள்ளது.

அண்டை மாநிலங்களின் கைகளுக்குச் செல்லும் வாய்ப்புகள்

தற்போது சர்வதேச முதலீட்டாளர்கள் ஒரு புதிய உற்பத்தி மையத்தையோ அல்லது குளோபல் கேப்பபிலிட்டி சென்டரையோ தொடங்குவதற்கு மிக முக்கியமான காரணியாகப் பார்ப்பது சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் கார்கோ கையாளுதல் திறனையே ஆகும். மீனம்பாக்கம் விமான நிலையம் ஏற்கனவே 3 கோடி பயணிகளைக் கையாண்டு, தன் அதிகபட்ச நெரிசலை எட்டி வரும் சூழலில், புதிய விமான நிலையம் அமைவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் முதலீடுகளை அண்டை மாநிலங்களை நோக்கி நகர்த்தும்.

பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையம் 2-வது முனையத்தின் மூலம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது; ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் கார்கோ சரக்கு போக்குவரத்தில் தென்னிந்தியாவின் மையமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு ஏற்கனவே ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் பல சவால்களை எதிர்கொண்ட நிலையில், சென்னைக்கான மாற்று விமான நிலையத் திட்டமும் காலவரையின்றி தள்ளிப்போவது உலக முதலீட்டாளர்களின் பார்வையில் தமிழகத்திற்கான முன்னுரிமையைக் குறைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

parandur vijay

மாற்றுத் திட்டம் என்ன?

விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் கண்டறியப்பட்டு புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், இடைப்பட்ட காலத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.20 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் புதிய முனையம் 5 அமைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஆனால், புதிய இடத்தை அடையாளம் கண்டு, இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் மத்திய அரசின் கொள்கை ரீதியான ஒப்புதல்களைப் பெறுவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகும்.

ஒரு சில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அவசியமானது என்றாலும், 2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டத் துடிக்கும் தமிழகத்திற்கு, உள்கட்டமைப்பு முடிவுகளில் ஏற்படும் இத்தகைய திடீர் மாற்றங்கள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தும் என்பதே தொழில் துறையினரின் பார்வையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+