சிபி ராதாகிருஷ்ணன் கேம்.. கவுண்டர் அரசியலை வைத்து.. திமுகவிற்கு பாஜக போட்ட செக்.. ட்விஸ்ட்
சென்னை: குடியரசு துணைத் தலைவரை தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளார். இன்று நடைபெற்று வரும் தேர்தலில் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பாஜகவின் இந்த மூவ் தமிழக அரசியலை தாண்டி கொங்கு மண்டலத்தை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்களும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவே முதல் முறை. ராதாகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர், ரெட்டி தெலுங்கானாவைச் சேர்ந்தவர். துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் குழுவில் 781 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மக்களவையில் 542 (ஒரு காலியிடம் தவிர), மாநிலங்களவையில் 239 (ஆறு காலியிடங்கள் தவிர) உறுப்பினர்கள் உள்ளனர். இதில் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை. NDA கூட்டணிக்கு சுமார் 422 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளும் கூட்டணியின் எண்ணிக்கை 430 வாக்குகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது NDA வேட்பாளருக்கு வெற்றிக்கு தேவையான வாக்குகளை வழங்குகிறது.

எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணிக்கு 300 முதல் 324 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகள் ஆதரவளித்தாலும், பெரும்பான்மையை அடைவது கடினம். ஜகதீப் தன்கர் 2022ல் பெற்ற 528 வாக்குகளை விட இந்தமுறை வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்கும். இருப்பினும், NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கொங்கு மண்டலத்தில் பாஜக பிளான்?
குடியரசு துணைத் தலைவரை தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளார். இன்று நடைபெற்று வரும் தேர்தலில் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பாஜகவின் இந்த மூவ் தமிழக அரசியலை தாண்டி கொங்கு மண்டலத்தை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இவர் கவுண்டர் ஜாதி பின்னணியை கொண்டவர். அங்கே கவுண்டர் பிரிவு மக்கள் இடையே, மற்ற சில கிளை சாதிகள், பட்டங்கள் இடையே நல்ல பெயர் பெற்றவர். திமுக பாஜகவில் இல்லாத, சிறுபான்மையினர் பின்னணியை கொண்ட ஏபிஜே அப்துல்கலாமையே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்கவில்லை என்பது அரசியல் வரலாறு. இதனால் என்டிஏ வேட்பாளர் யாராக இருந்தாலும் திமுக அவர்களை ஆதரிக்காது என்பதே அரசியல் வரலாறு. இப்போதும் அதே முடிவை திமுக எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். திமுக இவரைத்தான் ஆதரிக்கிறது.
ஆனால் இந்த முறை கவுண்டர் ஜாதி அரசியலை வைத்து திமுகவிற்கு பாஜக செக் வைத்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் கூட இல்லாத நிலையில் திமுகவிற்கு பாஜக புதிய நெருக்கடியை இதன் மூலம் கொடுத்துள்ளது. கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி (எதிர்காலத்தில் ஜனாதிபதி வாய்ப்பும் வரலாம்) ஆவதை திமுக தடுக்க பார்க்கிறது என்ற கருத்தை பாஜக முன்னெடுக்க வாய்ப்புகள் உள்ளன. இது கொங்கு மண்டலத்தில் சட்டசபை தேர்தல் சமயத்தில் வலுவான பிரச்சாரமாகவும் அமையலாம்.
சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டது எப்படி?
சி.பி. ராதாகிருஷ்ணன் 2023 முதல் 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். தெலங்கானா மாநிலத்தின் கூடுதல் பொறுப்பையும் வகித்துள்ளார். மேலும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவர் கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து இருமுறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அத்துடன், பாஜகவின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இன்று NDA வேட்பாளர் சுமார் 436 முதல் 448 வாக்குகளையும், ரெட்டி 320க்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெறலாம். இது தன்கரின் 2022ஆம் ஆண்டு வெற்றியை விட குறைந்த வித்தியாசமாக இருந்தாலும், தெளிவான வெற்றியாகவே அமையும். கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் பாஜகவிற்கு இவரின் வெற்றி பெரிய பூஸ்ட்டாக இருக்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications