மருதநாயகம் படத்தின் புரொடெக்ஷன் மேனேஜர்! அண்ணன் முரளியை போல் இளம்வயதில் மரணம்! டேனியல் பாலாஜி யார்?
சென்னை: நடிகர் முரளியின் சகோதரரான டேனியல் பாலாஜிக்கு டேனியல் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

அவரது உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று இரவே கொட்டிவாக்கம் மருத்துவமனையில் இயக்குநர்கள் கவுதம் வாசு தேவன் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
டேனியல் பாலாஜி, மறைந்த நடிகர் முரளியின் உடன் பிறவா சகோதரர் ஆவார். இவர் சித்தி, அலைகள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். சித்தி சீரியலில் டேனியல் கதாபாத்திரத்தில் நடித்ததால் பாலாஜி, டேனியல் பாலாஜி என அழைக்கப்பட்டார்.
அவர் சீரியல்கள் மூலம் நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இதைத் தொடர்ந்து காக்க காக்க, பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது குரலுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு வில்லத்தனத்திற்கு பெயர் பெற்றவர். பாலாஜி, கமல்ஹாசனின் மருதநாயகம் படத்திற்கு யூனிட் புரொடெக்ஷன் மேனேஜராக பணியாற்றினார். அங்கிருந்துதான் சித்தி தொடரில் நடித்தார்.
இவர் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டிக்கும் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடௌசியாக நடித்த படம் அறிவழகன் ஆகும். நடிகர் முரளியை போல் பாலாஜியும் இளம் வயதில் இறந்துவிட்டார், முரளியும் கிட்டதட்ட 46 முதல் 48 வயதில்தான் மரணமடைந்தார். அவர் பெங்களூரில் மரணமடைந்தார்.
முரளியும் கடந்த 2010-ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு அதர்வா உள்பட இரு மகன்கள் உள்ளனர். டேனியல் பாலாஜி கடந்த 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். அவரது உடல் இன்று ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications