"சீக்கிரம் ப்ரோபோஸ் பண்ணிடு".. சாகரின் காதலுக்கு பின் இருந்த தோனி.. ஓ பின்னணியில் இதுதான் நடந்ததா?
சென்னை: சிஎஸ்கே வீரர் தீபக் சாகர் நேற்று தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சம்பவம் பெரிய வைரலானது. இதற்கு பின் முக்கியமாக காரணமாக இருந்தது தோனிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்த காரணத்தால் ப்ளே ஆப் சமயத்தில் அந்த அணி சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 134 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் வெறும் 13 ஓவரில் 139 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. பஞ்சாப் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

போட்டிக்கு பின்
நேற்று போட்டிக்கு பின் மைதானத்தில் இருந்த எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் முக்கிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. சிஎஸ்கே வீரர் தீபக் சாகர் தனது தோழி ஜெயா பரத்வாஜ் என்ற பெண்ணிடம் நேற்று காதலை சொன்னார். ஜெயா முன் முட்டிபோட்டு, ரிங் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஜெயா காதலுக்கு ஒப்புக்கொண்டார்.

ஜெயா எஸ்
ஜெயா எஸ் சொன்ன இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. திடீரென சாகர் இப்படி காதலை சொல்வார் என்று ஜெயா எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவம் நேற்று இணையம் முழுக்க வைரலானது. அதன்பின் ஹோட்டலில் இவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கேக் வெட்டப்பட்டது.

கேக்
அதோடு கேக் வெட்டப்பட்ட பின் தோனி சாகரை தூக்கி அவர் முகம் முழுக்க கேக் பூசிய வீடியோவும் இணையம் முழுக்க வைரலானது. இந்த நிலையில் சாகர் நேற்று காதலை சொல்வதற்கு பின் முக்கியமாக காரணமாக இருந்தது தோனிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆம் சாகர் தனது காதலியிடம் இப்போது காதலை சொல்ல தோனிதான் காரணம்.

தோனி
ப்ளே ஆப் சென்றுவிட்டு காதலை சொல்லாமல் அல்லது இறுதிப்போட்டியில் காதலை சொல்லலாம் என்ற திட்டத்தில் சாகர் இருந்திருக்கிறார். பெரிய வெற்றி ஒன்றை பெற்றுவிட்டு அதன்பின் காதலை சொல்லலாம் என்று சாகர் நினைத்து இருக்கிறார். ஆனால் தோனி சாகரிடம்.. உடனே காதலை சொல்லிவிடு. காதலை எதற்காகவும் காக்க வைக்க வேண்டாம்.

சொல்லிவிடு
தோன்றும் போதே சொல்லிவிடு என்று கூறி இருக்கிறார். நேற்று போட்டி நடக்கும் போதே சாகரிடம் தோனி இதை பற்றி மீண்டும் சொல்லி இருக்கிறார். இதையடுத்துதான் நேற்று சாகர் தனது காதலியிடம் ப்ரோபோஸ் செய்தார். சாகரும் அவரது காதலி ஜெயாவும் பல காலமாக நண்பர்கள். இவர்கள் டேட்டிங் செய்து வந்த தகவலும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

பிசிசிஐ
பிசிசிஐ அனுமதியுடன் ஜெயாவை சிஎஸ்கே அணியின் பயோ பபுலுக்குள் சாகர் கொண்டு வந்தார். இதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இறுதிப்போட்டிக்கு பின்பாக ப்ரோபோஸ் செய்யலாம் என்று இருந்த சாகர் தோனி கொடுத்த நம்பிக்கையால் நேற்றே ப்ரோபோஸ் செய்துள்ளார்.
-
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு












Click it and Unblock the Notifications