10 அதிமுக எம்பிக்களின் வாக்குகள்.. சிஏஏ சட்டம் நிறைவேற காரணமாக மாறியது எப்படி? அன்று நடந்தது என்ன?
சென்னை: இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவோம் என்று மத்திய பாஜக அரசு கூறி உள்ள நிலையில் இந்த சட்டம் எப்படி முதலில் நிறைவேறியது என்று பார்க்க வேண்டும். இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற அதிமுகவும் முக்கியமான காரணம் ஆகும்.
நேற்று மாலை திடீரென சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது ஒன்றிய அரசு. 2019ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பெளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை
எதிர்ப்பு ஏன்?: குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது
எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்
எப்படி நிறைவேற்றியது: இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவோம் என்று மத்திய பாஜக அரசு கூறி உள்ள நிலையில் இந்த சட்டம் எப்படி முதலில் நிறைவேறியது என்று பார்க்க வேண்டும். இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற அதிமுகவும் முக்கியமான காரணம் ஆகும் மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:
அதிமுக எம்பிக்கள்:
01. SR பாலசுப்பிரமணியன்
02. N சந்திரசேகரன்
03. A முகமது ஜான்
04. AK முத்துக்கருப்பன்
05. A நவநீதகிருஷ்ணன்
06. R சசிகலா புஷ்பா
07. AK செல்வராஜ்
08. R. வைத்திலிங்கம்
09. A. விஜயகுமார்
10. விஜிலா சத்யநாத்
பாமக எம்பி:
11. அன்புமணி ராமதாஸ்
சிஏஏவுக்கு எதிராக வாக்களிக்காமல் திமுக கூட்டணி வெளிநடப்பு செய்ததாக அதிமுகவினர் போஸ்ட் செய்து வருகின்றனர். ஆனால் திமுக இந்த மசோதாவை எதிர்த்தது. மக்களவையில் எதிர்த்து வாக்களித்ததற்கான ஆதாரம் மக்களவை வலைத்தளத்தில் 615ஆம் பக்கத்தில் இருக்கிறது. திமுக மட்டுமின்றி திமுக கூட்டணி எம்பிக்களும் இதை எதிர்த்து வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்:
திமுக எம்பிக்கள்:
1. R.S. பாரதி
2. TKS இளங்கோவன்
3. M சண்முகம்
4. திருச்சி சிவா
5. P வில்சன்
மதிமுக எம்பி:
6. வைகோ
காங்கிரஸ் எம்பி:
7. P சிதம்பரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி
8. TK ரங்கராஜன்
Ayes - 125
Noes - 105
அன்புமணி மற்றும் மற்றும் 10 அதிமுக எம்பிக்களின் ஓட்டுதான் CAA சட்டம் நிறைவேற காரணம்.
அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால்
ஆதரவு 125-11=114
எதிர்ப்பு 105+11=116
116-114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதிமுக எம்பிக்கள் இந்த சட்டத்தை ஆதரித்த காரணத்தால் சட்டம் நிறைவேற காரணமாக மாறியது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications