அவர் அதிமுக போகவில்லையா! கேட்டதும் ஸ்டன் ஆன விஜய்.. ஆதவ் அர்ஜுனா தவெக பக்கம் வந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் எப்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டார் என்பதுதான் திமுக தரப்பு ஆராய்கிறது. இது குறித்த பின்னணிகளை மாநில உளவுத்துறை, ஆட்சி தலைமைக்கு விரிவாக ரிப்போர்ட் போட்டுள்ளதாம்.

அதில், "விஜய்க்கும் ஆதவ்வுக்கும் பொதுவான நண்பர் ஒருவர், விஜய்யை சமீபத்தில் சந்தித்தார். ஆதவ் பற்றி என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்? என நண்பர் கேட்க, அவர்தான் அதிமுகவில் சேர்கிறாராமே என விஜய் சொல்லியிருக்கிறார். அதெல்லாம் பொய் , உங்களின் அழைப்பிற்காக ஆதவ் காத்திருக்கிறார் என்று சொல்லியதும், உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என விஜய் சொன்னதன் அடிப்படையில், விஜய்-ஆதவ் சந்திப்பு நடந்துள்ளது.

edappadi palaniswami aadhav arjuna



அந்த சந்திப்பு 1 மணி நேரம் நீடித்தது. அதில், த.வெ.க.குறித்து தாங்கள் எடுத்த சர்வே ரிசல்ட் பற்றி விஜய்யிடம் விரிவாக விளக்கியிருக்கிறார். அப்போதுதான் இதுவரையில் தனக்குச் சொல்லப்பட்ட பல தகவல்கள் பொய்யானவை என விஜய்க்கு தெரியவந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், திமுகவுக்கு எதிராகவும் விஜய்யிடம் விளக்கியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. அதன் பிறகே, ஆதவ் அர்ஜுனாவுடம் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ள விஜய் முடிவெடுத்துள்ளார்" என்றெல்லாம் அந்த ரிப்போர்ட்டில் இருக்கிறதாம்.


திட்டம் என்ன?:



த.வெ.க.வின் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவுக்குமிடையே நேற்று அக்ரிமெண்ட் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இந்த அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணியிருக்கிறார் விஜய்.

த.வெ.க.வின் தேர்தல் வியூகப்பணிகளை ஆதவ் அர்ஜுனா கவனிப்பார் என்பதால், ஜான் ஆரோக்கியசாமிக்கான பொசிசன் எது என்பது தெரியவில்லை. ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க முடியாது என்பதால், த.வெ.க.வுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ஜான் விலகி விடுவார் என்கிற பேச்சு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஆதவ் அர்ஜுனாவும் ஜானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விஜய் விரும்புகிறாராம்.

இதனை ஜான் ஒப்புக் கொள்ள மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இணையச் சொல்லி விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆதவ்வோ, "இப்போதைக்கு வேண்டாம். தேவையற்ற காண்ட்ராவெர்சி உருவாகும். தேர்தல் வியூகம் தொடர்பான பணிகள் மட்டுமே இப்போதைக்கு இருக்கட்டும்" என்று கூறியுள்ளாராம். அதனால் த.வெ.க.வில் ஆதவ் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம் அடுத்த வாரம் முறைப்படி விஜய் அறிவிப்பார் என்கிறார்கள்.


ஜான் யார்?:



விஜய்க்கு பின்னணியில் இருந்தது ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.

ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+