கோலியை தலைகுனிய வைத்த "மொட்டை".. விதியால் நடந்த சின்ன விஷயம்! சிஎஸ்கேவிற்கு உதவியது எப்படி தெரியுமா?
சென்னை: எப்போதோ விதியால் நடந்த சின்ன விஷயம் இன்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணிக்கு உதவி உள்ளது. அப்படி என்ன நடந்தது?
சிஎஸ்கே பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 226/6 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளது.

தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் மட்டும் 3 ரன்களுக்கு அவுட்டாக, இன்னொரு பக்கம் டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். 45 பந்தில் கான்வே 83 ரன்கள் ஒரு பக்கம் எடுத்தார்.
இவர் 6 சிக்ஸ், 6 பவுண்டரி அடித்தார். இன்னொரு பக்கம் ரஹானே வெறும் 20 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம்.
அதேபோல் மிடில் ஓவர்களில் அதிரடி காட்டிய சிவம் துபேவும் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி 2 சிக்ஸ் அடக்கம்.
இதையடுத்து களமிறங்கிய ராயுடு 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். 9 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே அணி 226-6 ரன்கள் எடுத்தது.
பொதுவாக பெங்களூர் பிட்சில் 200க்கு மேல் எடுப்பது எளிது. 210க்கு மேல் எடுத்தால் அதை சேஸ் செய்வது கடினம். இன்றும் சிஎஸ்கே 226 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சூடு பிடித்தது.
இதையடுத்து இறங்கிய பெங்களூர் அணியில் கோலி 4 பந்தில் வெறும் 6 ரன்கள் எடுத்து ஆகாஷ் சிங் பந்தில் அவுட் ஆனார். பந்து பேட்டில் பட்டு, பின்னர் காலில் பட்டு கடைசியாக ஸ்டம்பில் பட்டு விக்கெட் விழுந்தது.
எப்போதோ விதியால் நடந்த சின்ன விஷயம் இன்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் கோலியின் விக்கெட்டை எடுக்க சிஎஸ்கே அணிக்கு உதவி உள்ளது. இன்று கோலி விக்கெட்டை எடுத்த ஆகாஷ் சிங்கை அணியில் எடுக்கும் எண்ணமே சிஎஸ்கே அணிக்கு முதலில் இல்லை.
இவர் வலை பயிற்சியில் மட்டுமே பவுலிங் செய்து வந்தார். முகேஷ் சவுத்திரிக்கு மாற்றாக மாற்றாக 19 வயதே நிரம்பிய ஆகாஷ் சிங்கை சிஎஸ்கே அணி மாற்று வீரராக எடுத்து உள்ளது. முகேஷ் சவுத்திரி கடந்த சீசனில் நன்றாக ஆடியும் கூட காயம் காரணமாக ஆட முடியவில்லை. இந்த சின்ன விஷயம்தான் ஆகாஷ் சிங்கை அணிக்குள் கொண்டு வர வழியை ஏற்படுத்தியது.
சிஎஸ்கே வலை பயிற்சியில் பவுலிங் செய்து வந்தவரை அப்படியே தோனி சவுத்திரிக்கு மாற்று வீரராக அணிக்குள் கொண்டு வந்தார்.
சவுத்திரி மட்டும் அப்போது காயம்படவில்லை என்றால் தற்போது "மொட்டை பாஸ்" ஆகாஷ் சிங் விராட் விக்கெட்டை எடுத்து கவனம் பெற்று இருக்க மாட்டார்.
இவர் இடதுகை சீம் பவுலர். முக்கியமாக இன் ஸ்விங் போட கூடியவர் . 140 கிலோ மீட்டருக்கும் வேகமாக அவ்வப்போது போடுவார். அதற்கெல்லாம் மேலே இவர் கடைசி ஓவர்களில் துல்லியமாக யார்க்கர் வீச கூடியவர்.
ராஜஸ்தான் மாநில அணிக்காகவும், நாகலாந்து மாநில அணிக்காகவும் இவர் சிறப்பாக ஆடி இருக்கிறார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் ஆடி உள்ளார். அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக 2020ல் ஆடி கவனம் பெற்றார்.

இவரின் பலமே டெத் ஓவர்களில் யார்க்கர் வீசுவது. அதேபோல் இன் ஸ்விங் செய்வது. 9 முதல் தர போட்டிகளில் இவர் 31 விக்கெட் எடுத்துள்ளார். அதாவது மேட்ச்சிற்கு 3 விக்கெட் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணி இவரை தற்போது 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்து உள்ளது. சிஎஸ்கே அணிக்கு தற்போது லெப்ட் ஆர்ம் சீம் பவுலர் இல்லை.
அந்த குறையை இவர் போக்குவார். முக்கியமாக இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்வார், யார்க்கர் போடுவார் என்பதால் தோனி இவரை இம்பாக்ட் வீரராக பயன்படுத்தி வருகிறார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications