ஏ.ஆர். ரகுமான் மகன் பயணித்த சொகுசு கார் விபத்தில் சிக்கியது எப்படி? 3:30 AM சென்னையில் நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏஆர் ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் கார் விபத்தில் சிக்கி மீண்டுள்ளார்.. சென்னை கிண்டியில் இன்று அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம், திரையுலகில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி விட்டது.. ஏ.ஆர்.ஆர். அமீன் விபத்தில் சிக்கினார் என்ற செய்தி வெளியானதிலிருந்தே, "அதிகாலை நேரத்தில் சென்னையில் உண்மையிரேயே நடந்தது என்ன? இந்த திடீர் விபத்துக்கு என்ன காரணம்?" என்ற கேள்விகள் பரவலாக எழத் தொடங்கியுள்ளன. இது குறித்த சில தகவல்களும் வெளியாகி உள்ளன.

இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சென்னை கோயம்பேடு பகுதியிலிருந்து கிண்டி நோக்கி ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் தனது நண்பருடன் ஒரு சொகுசு காரில் அதாவது போர்ஷ் காரில் வந்து கொண்டிருந்தார்.

AR Rahman Ameen Chennai Car Accident

ஏஆர் ரகுமான் மகன்

கத்திப்பாரா மேம்பாலத்தை கடந்து, கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருகே, காரில் சென்று கொண்டிருந்தபோது, பக்கவாட்டு சாலையிலிருந்து எதிர்பாராத விதமாக திடீரென குறுக்கே ஒரு ரேபிடோ வேகன்-ஆர் வந்தது.. அந்த கால் டாக்ஸி, அமீனின் சொகுசு கார் மீது பலமாக மோதியது.

இதில், எதிரெதிரே மற்றும் பக்கவாட்டில் 2 கார்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்தன... இந்த விபத்துக்கு காரணம் தெரியவில்லை.. அதிகாலையில் சிக்னல் பகுதிக்கு அருகே பக்கவாட்டு சாலையிலிருந்து வந்த டாக்ஸி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வந்ததா அல்லது அளவுக்கு அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்டி வந்ததா? என்று தெரியவில்லை..

சென்னை கிண்டி சிக்னல்

ஆனால், காரில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. இருந்தாலும், இந்த மோதலில் ஏ.ஆர்.ஆர். அமீன் மற்றும் அவருடன் பயணித்த நண்பருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல, ரேபிடோ டாக்ஸி வாகனத்தில் பயணித்த பயணிக்கும் காயம் ஏற்பட்டதால், அவர் உடனடியாக கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளார்.

ரேபிடோ டாக்ஸி

அதிகாலை 3.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.. இந்த விபத்து காரணமாக ஒலிம்பியா டெக் பார்க் ஜங்ஷனில், நடுரோட்டிலேயே சேதமடைந்த கார்கள் நின்றுவிட்டன.. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், டிராபிக்கை சீரமைத்தனர்.

இப்போது விபத்துக்குள்ளான ஏ.ஆர்.ஆர். அமீனின் சொகுசு கார் மற்றும் ரேபிடோ வேகன்-ஆர் கார் ஆகிய 2 வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விபத்து டிரைவரின் கவனக்குறைவால் நடந்ததா, அதிகாலை நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்டதா அல்லது சிக்னலை மீறியதால் நடந்ததா என்ற பல கோணங்களில் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+