சந்திரயான் 3 வந்ததும்.. நிலவிற்கு அருகே நடந்த அதிசயம்.. இஸ்ரோன்னா.. இஸ்ரோதான்.. விக்ரம் செய்த மேஜிக்
சென்னை: சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கும் சந்திரயான் 2ன் ஆர்பிட்டருக்கும் இடையில் நேற்று எப்படி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்த தொடர்பு எப்படி ஏற்படுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்ளும் முன் முக்கியமான இரண்டு விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் விஷயம்: கடந்த ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திட்டம் இதன் மூலம் பாதி தோல்வி அடைந்தது உறுதி செய்யப்பட்டது.
விஷயம் 2: இந்த திட்டம் தோல்வி காரணமாக நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் சோதனையை நிறைவு செய்வதற்காக சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite Launch Vehicle Mark III ராக்கெட் மூலம் இதை கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
ஆனால் முதல் திட்டத்தில் இருந்தது போல இதில் ஆர்பிட்டர் இல்லை. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு சென்றது.
இது சந்திரயான் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திரயான் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படுத்தப்பட்டது சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல். பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவில் இருந்து 100 கிமீ தூரம் உள்ள வட்டப்பாதை வரை சந்திரயான் 3வை கொண்டு செல்ல உதவியது இந்த ப்ரோபல்ஷன் மாடுல்தான்.
எப்படி தொடர்பு: இந்த நிலையில்தான் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கும் சந்திரயான் 2ன் ஆர்பிட்டருக்கும் இடையில் நேற்று தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இரண்டுக்கும் இடையில் எப்படி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டருக்கும் சந்திரயான் 2ன் ஆர்பிட்டருக்கும் இடையில் ரேடியோ அலைகள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நாம் பூமியில் பயன்படுத்தப்படும் அதே ரேடியோ சிக்னல்தான் இங்கேயும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இவை மிக எளிமையாக பிரச்சனையே இன்றி இணைப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் 4 வருடம் கழித்தும் இயங்கி வந்ததால்தான் இந்த முறை ஆர்பிட்டரையே இஸ்ரோ அனுப்பாமல் செலவை மிச்சம் செய்தது. ஆர்பிட்டர் இல்லாமலே இஸ்ரோ விக்ரமை அனுப்பியது.
ஏன் தொடர்பு: விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய பின் சிக்னலை பெற மட்டுமே முடியும். முறையாக சிக்னலை வேகமாக அனுப்ப முடியாது. இதற்கு ஆர்பிட்டர் தேவை. அதற்காகவே சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் உடன் விக்ரம் இணைந்துள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் போது முக்கியமான தகவலை பூமிக்கு அனுப்பவும், தொலைத்தொடர்பு ரீதியாக விக்ரம் லேண்டருக்கு உதவவும் இந்த ஆர்பிட்டர் உதவியாக இருக்கும். பூமிக்கு வேகமாக தகவல்களை அனுப்ப இந்த ஆர்பிட்டர் உதவும்.
இணைப்பு மெசேஜ்: "'Welcome, buddy!' என்ற மெசேஜ் மூலம் சந்திரயான் 2வின் ஆர்பிட்டர் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் உடன் இணைப்பை ஏற்படுத்தியது. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதற்கு இது மேலும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications