ஸ்டாலினிடம் மாற்றம்.. "டிஃபன்சில்" இருந்து "அஃபன்ஸ்" மாறியது ஏன்? தினம் தினம் காலை நோட் பண்ணீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், திமுக அமைச்சர்களும் கடந்த சில நாட்களாக அடித்து ஆடிக்கொண்டு இருக்கின்றனர். பொதுவாக.. திமுகவிற்கு ஒரு அரசியல் குணம் உள்ளது. கடந்த 20- 30 வருடங்களாக எந்த விவகாரமாக இருந்தாலும் அதற்கு பதில் சொல்வதே வழக்கம்.

அதாவது ஒரு புகார் திமுக மீது வைக்கப்படும்.. விமர்சனம் வைக்கப்படும். அதற்கு திமுக பதில் சொல்லும். அதாவது டிஃபன்ஸ் மோட். ஆனால் கடந்த சில நாட்களாக இந்தி விவகாரத்திலும், நாடாளுமன்ற எம்பிக்கள் எண்ணிக்கை மாற்ற விவகாரத்திலும் திமுக அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது.

MK Stalin

அரசியலில் narrative உருவாக்குவது முக்கியம். அதாவது ஒரு வாதத்தை யார் எடுத்து வைக்கிறார்களோ.. அதற்கு பதில் சொல்பவர்களை விட.. அந்த வாதத்தை உருவாக்குபவர்களின் கையே ஓங்கி இருக்கும். திமுக இந்த முறை வாதங்களுக்கு பதில் சொல்லாமல் வாதத்தை உருவாக்க தொடங்கி உள்ளது.

ஸ்டாலின் ஆக்சன்

தினசரி காலை முதல்வர் ஸ்டாலின் இந்தி திணிப்பு விவகாரத்திற்கு எதிராக கடுமையான அறிக்கைகளை வெளியிடுகிறார். இத்தனை நாட்களாக மென்மையாக செயல்பட்ட அவர்.. இப்போது நேரடியாக அடித்து ஆட தொடங்கி உள்ளார்.

முக்கியமாக அவர் பயன்படுத்தும் சில வார்த்தைகள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஸ்டாலின் அடித்து ஆட தொடங்கிவிட்டார் என்பதற்கு உதாரணமாகவும் அமைந்து உள்ளது. எடுத்துக்காட்டாக சமஸ்கிருதம் செத்த மொழி.. இந்தி பெரிய பயன்பாடு இல்லாத மொழி என்று ஆங்கிலத்தில் புகார் அளித்துள்ளார்.

1971-இல் கோவையில் நடைபெற்ற தி.மு.கழக மாணவர் மாநாட்டில் 18 வயது இளைஞனாக இந்தித் திணிப்புக்கு எதிராக முழங்கிய அதேவேகத்துடன் சூளுரைக்கிறேன்... ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன்! தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவேன்! இந்தியில் திட்டினால் அதை புரிந்து கொள்ள இந்தி தெரிய வேண்டும் என்கிறார்கள்.. நீங்கள் தமிழில் திட்டுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் வாதம்

அதிலும் ஸ்டாலின் வைக்கும் சில வாதங்கள் எதிர் தரப்பால் பதிலடி கொடுக்க முடியாத வாதங்களாக மாறி உள்ளன . "இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!

தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!, என்று கூறி உள்ளார்.

கொள்கை பரப்பு

இந்தி திணிப்பு, நாடாளுமன்ற சீட் குறைப்பு என்றதும் கொஞ்சமும் யோசிக்காமல் ஸ்டாலின் அடித்து ஆட தொடங்கி உள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?, போன்ற போஸ்டுகளை தினம் தினம் காலை செய்து வருகிறார்.

அமைச்சர்கள் அதிரடி

இன்னொரு பக்கம் அமைச்சர்களும் களமிறக்கப்பட்டு பேச தொடங்கி உள்ளனர். சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் பேச்சு டிரெண்டானது. அத்தனை நாட்கள் அமைதியாக இருந்த பிடிஆர் இப்போது தேசிய அளவில் டிரெண்ட்.

அதிலும் ஸ்டாலின் ஒரு பக்கம் இந்தி அழித்த வடஇந்திய மொழிகளை பட்டியலிட்டு.. இந்திக்கு எதிராக தேசிய அளவில் அலையை கொண்டு வந்துள்ளார். இந்தி திணிப்பு விவகாரம், நாடாளுமன்ற சீட் குறைப்பு என்றதும் கொஞ்சமும் யோசிக்காமல் திமுக டிஃபன்ஸ் மோடில் இருந்து அஃபன்ஸ் மோடிற்கு மாறிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+