அண்ணாமலையை கண்டதும்.. ஸ்டாலின் தந்த ரியாக்சன்! பாஜக புருவத்தை உயர்த்திய பாலு.. வெளியே வராத 2 சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி கடந்த வாரம் சென்னை வந்த போது விமான நிலையத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்த exclusive தகவல்கள் ஒன்இந்தியா தமிழுக்கு கிடைத்துள்ளன. இந்த இரண்டு சம்பவங்களும் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

கடந்த வாரம் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். ரயில் நிலையங்களை சீர்படுத்துவது தொடங்கி பல்வேறு திட்டங்களை நேற்று நேரு அரங்கில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன.

இரண்டு நிகழ்வுகள்

இரண்டு நிகழ்வுகள்

இந்த நிலையில், இந்த பயணத்தில் வெளியில் வராத இரண்டாவது நிகழ்வுகள் குறித்த தகவல்கள் கிடைத்ததுள்ளது. முதலாவது.. பிரதமர் மோடியை வரவேற்க ஐ.என்.எஸ். விமானத்தளத்துக்கு டி.ஆர்.பாலு, கே.என் நேருவுடன் சென்றிருந்தார் முதல்வர் ஸ்டாலின். பிரதமர் மோடி வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே ஸ்டாலினின் கார் விமான தளத்துக்கு சென்றது.

ஸ்டாலின் மரியாதை

ஸ்டாலின் மரியாதை

அவரது காரை மட்டுமே உள்ளே அனுமதித்தனர் மோடியின் பாதுகாப்புப் படை அதிகாரிகள். விமான தளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மோடியை வரவேற்க காத்திருந்தனர். காரை விட்டு இறங்கி மோடியை வரவேற்கும் பகுதிக்கு ஸ்டாலின் சென்ற போது, அங்கிருந்த அண்ணாமலையை பார்த்த ஸ்டாலின், அவருக்கு வணக்கம் சொல்ல, அண்ணாமலையும் பதிலுக்கு வணக்கம் சொன்னார்.

அண்ணாமலை வணக்கம்

அண்ணாமலை வணக்கம்

அரசியலில் எதிர் எதிர் துருவமாக இருந்தாலும் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிப்பதில் திமுகவினருக்கு நிகர் திமுக தான். அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்கும் தொணியில் அண்ணாமலைக்கு வணக்கம் வைத்தார் ஸ்டாலின். இதனை ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் மற்ற பாஜக நிர்வாகிகள் ஆச்சரியமாகப் பார்த்தனர். 10 நிமிட காத்திருப்பில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்கியது.

பொன்னாடை

பொன்னாடை

அவருக்கு பொன்னாடை போர்த்தி, சிலப்பதிகாரம் புத்தகத்தைத் தந்து வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். இரண்டாவது விஷயம்.. மோடி வருகையின் போது முதல்வர் அருகில் இருந்த டி.ஆர்.பாலுவும், நேருவும் மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர். இதில், டி.ஆர்.பாலு மட்டும் தனது உடலை வளைத்து குனிந்து வணக்கம் சொன்னார். இந்த காட்சியை பார்த்த பாஜக நிர்வாகிகள் புருவம் உயர ஆச்சரியப்பட்டனர். டிஆர் பாலு இப்படி மரியாதை செய்ததை அங்கிருந்தவர்கள் எதிர்பார்க்கவில்லை.

டிஆர் பாலு

டிஆர் பாலு

இப்படி டிஆர் பாலு வளைந்து வணக்கம் வைத்ததை அண்ணாமலையும் எதிர்ப்பார்க்கவில்லை. அட.. என்ன இவர் இப்படி செய்கிறார் என்பது போல அண்ணாமலை வியப்பாக பார்த்தார். இதையடுத்து ஓபிஎஸ்சை நோக்கி அண்ணாமலை.. என்ன டிஆர் பாலு திடீரென இவ்வளவு மரியாதை தருகிறார் என்ற தொனியில் பார்த்தார். இதன் அர்த்தம் புரிந்த ஓபிஎஸ் மெல்ல புன்முருவலுடன் பதிலுக்கு சிரித்தார். மோடி அங்கிருந்து கிளம்பிய நிலையில், டி.ஆர்.பாலு இப்படி திடீரென அதிக மரியாதை செலுத்தியதை பற்றி பாஜகவினர் மாறி மாறி பேசி இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+