தங்கத்திற்கு "நோ".. ஸ்டாலின் போட்ட ரகசிய பிளான்.. திமுகவில் உள்ளவர்களே குழம்ப.. நடந்தது என்ன?
சென்னை: நீதிமன்ற உத்தரவுகளால் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோரின் அமைச்சர் பதவியை பறித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு அமைச்சரவையில் துறைகளை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டு உள்ளனர். செந்தில் பாலாஜியின் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியிடம் இருந்த வனத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சராக மனோ தங்கராஜும் பதவி ஏற்க உள்ளார். இதில் பொன்முடி பதவி பறிப்பிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
ஏற்கனவே பொன்முடியின் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டு உள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்படுவதாக கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு ஒரு வாரத்தில் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி பதவி
செந்தில்பாலாஜி சிறையில் இருந்தபோது, அவரிடமிருந்த மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறையை முத்துச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்திருந்தார் ஸ்டாலின். இப்போதும் அதேபோல மாற்றமின்றி ஒதுக்கப்படும் என்று தங்கம் தென்னரசு எதிர்பார்த்தார்.
ஆனால், அதற்கு மாறாக சிவசங்கருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். அமைச்சரவையில் காண்ட்ராவெர்சி இல்லாதவர், சட்டமன்றத்தில் பாமக மற்றும் அதிமுகவுக்கு செம ஃபைட்டுடன் பதிலடி தருபவர், போக்குவரத்துத்துறையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு கண்டிருப்பவர்.
தேர்தல் நேரத்தில் வன்னியர் அமைச்சர்களான துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரைக் காட்டிலும் பாமகவுக்கு பதிலடி தருவதில் கனமான பாயிண்டுகளைத் தருபவர் என்பதையெல்லாம் கணக்கிட்டுத்தான் சிவசங்கரை தேர்வு ஸ்டாலின் செய்தார் என்கிறார்கள். மேலும், சிவசங்கருக்கு துணை முதல்வர் உதயநிதியின் ஸ்ட்ராங் ரெக்கமன்டேசன் இருந்துள்ளது,
உதயநிதி
மீண்டும் மின்சாரத்துறைக் கிடைக்காததில் தங்கம் தென்னரசுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இலாகா மாற்றம் குறித்து அவரிடம் பலரும் பேசும் போதும் எவ்வித கமெண்டும் செய்யாமல், எதிர்முனையில் பேசுவதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாராம் தங்கம் தென்னரசு.
மது விலக்கு ஆயத்தீர்வை துறையை செந்தில்பாலாஜி சிபாரிசு செய்யும் ஒருவருக்கு ஒதுக்கீடு செய்ய ஆரம்பத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருக்கிறது. அதிகபட்சம் 6 மாதங்களுக்குத்தான் அரசு பணிகளில் வேகம் இருக்கும் ; அதன்பிறகு தேர்தல் பணிகளில் சீரியசாக ஓட வேண்டியதிருக்கும். அதனால், சர்ச்சைகள் அதிகம் புழங்கும் டாஸ்மாக் நிறுவனத்தை புதிதாக ஒருவருக்கு கொடுப்பது, அதுவும் 6 மாதங்களுக்கு பிறகு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவேண்டிய சூழலில் புதிய நபரை அமைச்சரவையில் சேர்ப்பது ஆரோக்கியமானதாக இருக்காது.
சீனியர் ஒருவர்
அதனால், சீனியரிடம் ஒருவரிடமே கொடுத்துவிடலாம். கடந்த முறை முத்துச்சாமியிடம் கொடுத்தப்போது எந்த பிரச்சனைகளும் வரவில்லை. பின்னால் இருந்து நாம் தானே கவனித்துக்கொண்டோம். அதேபோல இப்போதும் ஏற்பாடு செய்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் சரிதான் என்று ஸ்டாலின் ஓ.கே. சொல்ல, முத்துச்சாமியை டிக் அடித்துள்ளார் ஸ்டாலின்.
முத்துச்சாமிக்கு மீண்டும் கூடுதல் பொறுப்புக் கொடுத்திருந்தாலும், இந்த முறை செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்கும் மறைமுகமாக டாஸ்மாக் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ளும் வகையில், சில ஏற்பாடுகள் சீக்ரெட்டாக செய்யப்பட்டுள்ளன என்கிற தவல்கள் கிடைக்கின்றன
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications