வகையாக எடப்பாடியை லாக் செய்த ஸ்டாலின்.. இரும்புப்பிடி.. அலறிய அதிமுக.. கிண்டியில் என்ன ஆச்சு?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் போட்டு வரும் முக்கியமான ஸ்கெட்ச் ஒன்றில் எடப்பாடி பழனிசாமி சிக்கிக்கொண்டதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர் என் ரவி மீண்டும் லைம்லைட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் அவரின் பேச்சுக்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்துகொண்டார். அப்போது அவர், தமிழ்நாட்டில் ஆரியம் திராவிடம் கிடையாது. தமிழகம் புண்ணிய பூமி. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றோர் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றார்கள்.
மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. அரசியல் கட்சி தலைவரின் நினைவு தினத்தில் அரசால் இப்படி தடை போட முடியுமா?, என்று பேசி இருந்தார்.
டி ஆர் பாலு பதிலடி : இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு கடும் விமர்சனம் செய்து இருந்தார். ஆளுநருக்கு வெட்கம் இல்லை. ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை. மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழ்நாடு அறியும். தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ரவி பாடம் எடுக்க வேண்டாம், என்று கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனால் திமுக - ஆளுநர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு இடையில்தான் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. குண்டு வீசி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி கருக்கா முத்துவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் தற்போதுபுழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா என்ற வினோத் மீது நேற்று கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூட கூறப்படுகிறது. சர்வசாதாரணமாக நடந்து வந்தே பெட்ரோல் குண்டு வீசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் ஆக்சன் எடுத்துள்ளது. இந்த நிலையில்தான் ஆளும் திமுக தரப்பு தற்போது வேறு வகையில் அதிமுகவிற்கு செக் வைத்துள்ளதாம். முதல்வர் ஸ்டாலின் போட்டு வரும் முக்கியமான ஸ்கெட்ச் ஒன்றில் எடப்பாடி பழனிசாமி சிக்கிக்கொண்டதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக வட்டார தகவல்: அதன்படி ஆளுநர் திராவிடம் இல்லை என்று கூறியதற்கு எடப்பாடி ரியாக்சன் என்ன என்று கேட்க வைக்க திமுக தீவிரமாக முயன்று வருகிறதாம். ஏற்கனவே இதை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு.. திராவிடம் - ஆரியம் பற்றி தெரியாது. நான் அவ்வளவு படிக்கவில்லை. அதை பற்றி புராணங்கள் படித்தவர்களிடம் கேட்க வேண்டும் என்று எடப்பாடி நழுவிக்கொண்டார்.
இந்த நிலையில்தான் இதில் எடப்பாடி கருத்து என்ன என்று உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார். கட்சியில் திராவிடம் என்ற பெயரை வைத்துக்கொண்டு இதற்கு கூட பாஜக நியமித்த ஆளுநரை எதிர்க்காமல் இருப்பது சரியா என்று திமுக எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி இப்போது பாஜகவை எதிர்ப்பது போல.. இஸ்லாமியர்களை ஆதரிப்பது போல பேசி வருகிறார். பாஜகவுடன் சேர்ந்து சிஏஏ போன்ற தவறான மசோதாக்களுக்கு ஆதரவு அளித்துவிட்டதாக கூறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி நடிப்பதாக... இந்த கூட்டணி முறிவு எல்லாம் வெறும் நாடகம் என்று ஸ்டாலின் சமீபத்தில் திமுக முகவர்கள் கூட்டத்தில் பேசி இருந்தார்.
இப்போது அதை உறுதி செய்யும் விதமாக எடப்பாடி ஆளுநரை எதிர்க்க மறுத்துள்ளார். அடுத்தடுத்து திமுக இதை பொதுவில் பேச உள்ளதாம். பாருங்க எடப்பாடி ஆளுநரை எதிர்க்க மறுக்கிறார். இவர்களுக்கு பாஜகவுடன் ரகசிய கூட்டு இருக்கு. அதனால்தான் இப்படி செய்கிறார் . இவர்களை நம்பி இஸ்லாமியர்கள் ஏமாற கூடாது என்று கூறி ஸ்டாலின் லாக் செய்ய இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications