ஸ்டாலினின் சைக்காலஜி அட்டாக்.. களமிறக்கப்பட்ட "உதயநிதி".. இதை எதிர்பார்க்கவே இல்லையே! கவனிச்சீங்களா?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் திமுக செய்யும் பிரச்சாரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்யும் பிரச்சாரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
உதாரணமாக, சமீபத்தில் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன், எடப்பாடி பழனிச்சாமி சிரித்தபடி நிற்கும் போட்டோவை காட்டி விமர்சனம் செய்தார். நானாவது எய்ம்ஸ் கல்லைத் தான் காட்டினேன். இங்கே ஒருவர் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பாருங்க என அந்த போட்டோவை காட்டி விமர்சித்து இருந்தார்.

எடப்பாடி பதிலடி: இதற்கு இன்று தூத்துக்குடி பிரசாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடியுடன், உதயநிதி ஸ்டாலின் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை காண்பித்த எடப்பாடி பழனிச்சாமி, ‛‛நீங்களும் இத தானே காட்டுறீங்க. வேற எதாச்சு காட்டுறீங்களா?. நான் சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். நீங்க காட்டுனா சரி. நான் காட்டுனா தவறா?. நான் கேட்கிறேன் சிரிக்கிறது தப்பா? ஸ்டாலினுக்கு சிரிப்பே வராது. எங்கேயாவது சிரிச்சி பார்த்திருக்கீங்களா'' என பதிலடி கொடுத்தார்.
உதயநிதி பதிலடி: வேலூர் லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளரும், அமைச்சர் துரை முருகனின் மகனுமான கதிர் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவிக்கப்பட்டபோது சசிகலா காலில் விழுந்த போட்டோ எடுத்துக்காட்டி உதயநிதி விமர்சித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று நான் பாஜகவிவிடம் கேட்டால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏன் கோபம் வருகிறது. இதற்கு பெயர் தான் கள்ளக்காதல். நான் இன்னொரு போட்டோவை காட்டுகிறேன். இதுமாதிரி இன்னொரு போட்டோவை காண்பித்தால் நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன்'' எனக்கூறி சவால் விட்டு சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் போட்டோவை உதயநிதி ஸ்டாலின் காண்பித்தார், என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் வைத்தார்.
சைக்காலஜி அட்டாக்: 2024 லோக்சபா தேர்தலில் திமுக செய்யும் பிரச்சாரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்யும் பிரச்சாரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது
இந்த மோதல் மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் மொத்த போகசை உதயநிதி ஸ்டாலின் பக்கம் திருப்பி உள்ளது திமுக. எடப்பாடி vs உதயநிதி என்ற அரசியல் சூழ்நிலையை திமுக கையில் எடுத்துள்ளது. எடப்பாடி முதல்வர் ஸ்டாலின் பக்கம் திரும்ப முடியாமல்.. உதயநிதியை மட்டுமே போகஸ் செய்யும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
முதலில் உதயநிதியை தாண்டி வாருங்கள்.. அப்பறம்.. ஸ்டாலினை பற்றி பேசலாம் என்று களநிலவரத்தை முழுக்க முழுக்க எடப்பாடி vs உதயநிதி என்று மாற்றி உள்ளனர். மு க ஸ்டாலின் போகிற இடங்களில் எல்லாம் எளிமையாக திமுகவின் திட்டங்களை, மகளிர் உரிமை தொகை பற்றி எல்லாம் பேசி வருகிறார்.
இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பதில் கொடுக்க முடியாத அளவிற்கு உதயநிதியை வைத்து அவரை திமுக டீல் செய்து வருகிறது. உதயநிதியை வைத்து லோக் சபா தேர்தலுக்கான ஸ்மார்ட் நரேட்டிவை திமுக இந்த தேர்தலில் உருவாக்கி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications