பீனிக்ஸ் "ரஹானேவை" எழுந்து பறக்க வைத்த மேஜிக்.. ருத்ர தாண்டவத்திற்கு பின் இருக்கும்.. அந்த ரகசியம்!
சென்னை; இன்று சிஎஸ்கே கொல்கத்தா இடையிலான போட்டியில் ரஹானே ஆடிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடியாக வென்றுள்ளது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 235/4 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி வெறும் 186-8 ரன்கள் மட்டுமே 20 ஓவரில் எடுக்க சிஎஸ்கே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று சிஎஸ்கே ஒப்பனர் கெய்க்வாட் 20 பந்தில் 35 ரன்கள் எடுத்தார்.
தேவன் கான்வே 40 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடக்கம். இன்னொரு பக்கம் சிவம் துபே 50 ரன்களை 21 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடக்கம்.
இன்னொரு பக்கம் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய ரஹானே 29 பந்தில் அவுட் ஆகாமல் 71 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸ், 6 பவுண்டரி அடக்கம்.

இன்று அவர் பவுண்டரி அடித்த சமயங்களில் எல்லாம் முழு கண்ட்ரோலில் இருந்தார். சரியான டைமிங்கில், நன்றாக இவர் கேப்பை பார்த்து துல்லியமாக ஆடிய விதம் இவரின் அனுபவத்தை அப்படியே வெளிக்காட்டியது.
நேற்று இந்த போட்டியில் ரஹானே ஆடிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. முழுக்க முழுக்க ஆட்டம் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. சரியான கண்ட்ரோலில் அவர் துல்லியமாக பேட்டிங் செய்தார். எங்கேயுமே அவர் பால்ஸ் ஷாட் அடிக்கவில்லை. சிஎஸ்கே அணியில் பொதுவாக மறைந்து போன ஆன்மா வந்தால் கூட அசத்தல் ஆட்டம் போடும். அதை நேற்று ரஹானேவும் செய்து காட்டினார்.
இங்கே சொதப்பிவிடுவார் என்று கூறும் அளவிற்கு அவரின் பேட்டிங் எங்குமே சொதப்பலாக இல்லை. டெஸ்ட் வீரர் என்று அழைக்கப்பட்டவர்.. டெஸ்ட் அணியில் இருந்தே நீக்கப்பட்ட பின்பும் கூட டி 20 போட்டியில் சிதறவிட்டுள்ளார்.
இந்த சீசனில் இதுவரை ரஹானே ஆடிய போட்டியில் ஒரு போட்டி தவிர எதிலும் ஏமாற்றம் அளிக்கவில்லை.
இந்த சீசனில் அவர் எடுத்த ரன்கள்,
61(27)
31(19)
37(20)
9(10)
71(29)
இன்று நடந்த போட்டியில் ரஹானே
முதல் 1-10 பந்துகள் - 162 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார்.
அடுத்த 11-20 பந்துகள் - 223 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார்.
அடுத்த 21-30 பந்துகள் - 256 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார்.
ரஹானே தனது இத்தனை வருட ஐபிஎல் கேரியரில் இதுவரை 2 முறை மட்டுமே 200 + ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி உள்ளார்.
இன்று 244.82 - கேகேஆர் அணிக்கு எதிராக
225.92 - மும்பைக்கு எதிராக
மும்பைக்கு எதிரான ஐபிஎல் 2023 ஆட்டத்தில் சிஎஸ்கே அணி அதிரடி வெற்றி பெற்றது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
இதில் ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கருதப்பட்டு வந்த அவரின் இந்த சிறப்பான பேட்ஸ்மேன் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
சிஎஸ்கேவில் மாற்றத்திற்கான காரணம்?
பெங்களூரில் அணியால் இவர் இனி வேலைக்கு ஆக மாட்டார் என்று விரட்டப்பட்ட வாட்சன் சிஎஸ்கே வந்து மிக சிறப்பாக ஆடினார். அதேபோல் மொயின் அலி, துபே போன்றவர்களும் அவ்வளவுதான் என்று கருதப்பட்ட போது சிஎஸ்கேவில் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
மும்பை போன்ற அணியால் அம்பதி ராயுடு ஓரம்கட்டப்பட்ட பின்பும் கூட சிஎஸ்கே வந்து தொடர்ச்சியாக ராயுடு சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கிறார். மேலும் ராபின் ஊத்தாப்பாவை ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மாறி மாறி ஆட வைத்து கேம் ஆடிக்கொண்டு இருந்த நிலையில் சிஎஸ்கே அவரை சிறப்பாக பயன்படுத்தி, கடந்த சீசனுக்கு முந்தைய சீசன் கோப்பை அடிக்கவும் காரணமாக இருந்தது.
தற்போது அதேபோல்தான் பார்ம் அவுட் ஆகிவிட்டார் என்று கருதப்பட்ட ரஹானேவை எடுத்து.. டி 20 வீரர் இல்லை என்று கருதப்பட்ட வீரரையே வைத்து டி 20 போட்டியில் சிஎஸ்கே அணி வென்றுள்ளது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதற்கு முன்பாகவே ரஹானே தனது டி 20 போட்டி திறனை வெளிப்படுத்தி உள்ளது.
காரணம் என்ன?
முதல் தர போட்டிகளில் இவர் தொடர்ந்து ஆடியது முதல் காரணம் .
இரண்டாவதாக, டி 20 பார்மெட் ஆட்டமான சையது முஸ்தாக் கோப்பை தொடரில் மும்பை அணிக்காக இவர் அடுத்தடுத்து பல அரை சதங்களை அடித்துள்ளார். ஒரு போட்டியில் 50 பந்தில் 74 ரன்கள் அடித்து மிரட்டினார். கடந்த இரண்டு சீசன்களாக சையது முஷ்டாக் டி 20 கோப்பை தொடரில் இவர் சிறப்பாக ஆடி வருகிறார்
கடைசியாக, சிஎஸ்கே இவரை நம்பி அணியில் எடுத்தது மட்டுமின்றி அவரை சிறப்பாக பயன்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளது. சிஎஸ்கே இவரை நம்பிய விதம், அவருக்கு சப்போர்ட் செய்த விதம் அவரை ஜாலியாக ஆட வைத்துள்ளது.
-
வருங்கால சிஎஸ்கே கேப்டன்.. ஆயுஷ் மாத்ரே பேட்டிங் ஆர்டரில் மாற்றம்.. ருதுராஜ் கொடுத்த மெகா அப்டேட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications