அந்த ஒரு புள்ளி.. சிஎஸ்கேவிற்கு சாதகமாக மாறிய போட்டி.. பெங்களூரை வீழ்த்த காரணமே இதுதான்! பின்னணி
சென்னை: பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
சிஎஸ்கே பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 226/6 ரன்கள் எடுத்தது

தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் மட்டும் 3 ரன்களுக்கு அவுட்டாக, இன்னொரு பக்கம் டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். 45 பந்தில் கான்வே 83 ரன்கள் ஒரு பக்கம் எடுத்தார்.
இவர் 6 சிக்ஸ், 6 பவுண்டரி அடித்தார். இன்னொரு பக்கம் ரஹானே வெறும் 20 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம்.
அதேபோல் மிடில் ஓவர்களில் அதிரடி காட்டிய சிவம் துபேவும் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி 2 சிக்ஸ் அடக்கம்.
இதையடுத்து களமிறங்கிய ராயுடு 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். 9 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே அணி 226-6 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் மைதானம் மிகவும் சிறியது. இங்கே சிக்ஸ் அடிப்பது எளிது. பெரிதாக அச்சம் இன்றி சிக்ஸ் அடிக்க முடியும். பொதுவாக பெங்களூர் பிட்சில் 200க்கு மேல் எடுப்பது எளிது. 210க்கு மேல் எடுத்தால் அதை சேஸ் செய்வது கடினம். இன்றும் சிஎஸ்கே 226 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சூடு பிடித்தது.
இதையடுத்து இறங்கிய பெங்களூர் அணியில் கோலி 4 பந்தில் வெறும் 6 ரன்கள் எடுத்து ஆகாஷ் சிங் பந்தில் அவுட் ஆனார்.
ஆனால் அதன்பின் ஆர்சிபி டாப் ஆர்டர் வீரர்கள் சிஎஸ்கே பவுலர்களை துவைத்து எடுக்க தொடங்கினார்கள். ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ் 33 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இவர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்தார்.
இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல் 36 பந்தில் 76 அடித்தார். இதில் 8 சிக்ஸ், 3 பவுண்டரி அடித்தார்.
இவர்கள் இருவரும் களத்தில் இருந்தவரை ஆட்டம் பெங்களூர் வசம்தான் இருந்தது. 12.1 ஓவரில் தீக்சனா ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆனார். இந்த ஓவரில் விழுந்த விக்கெட்தான் மொத்தமாக மேட்சை மாற்றியது.
அதன்பின் ஆட்டம் சிஎஸ்கே வசம் வந்தது. அதன்பின் வந்த ஷாபாஸ் அகமது 12 ரன்களில் அவுட்டாக, தினேஷ் கார்த்திக் மட்டும் 14 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். 1 சிக்ஸ், 3 பவுண்டரி எடுத்தார்.
இன்னொரு பக்கம் சுயாஸ் 11 பந்தில் 19 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவிற்கு பிரஷர் கொடுத்தார். ஆனால் அவரும் பதிரனா பந்தில் அவுட்டாக ஆட்டம் சிஎஸ்கே வசம் மொத்தமாக திரும்பியது.

கடைசி 2 பந்தில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 218-8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.
இதுவரை 5 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே 3 போட்டிகளில் வென்று, 2 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications