இந்த இரண்டு வாக்கியம்தான் முக்கியம்.. அஜித்தை வைத்து.. விஜய்க்கு திமுக மறைமுகமாக அனுப்பிய.. மெசேஜ்!
சென்னை: நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்பி எம்எம் அப்துல்லா ஆகியோர் நடிகர் அஜித் குறித்து போஸ்ட் செய்துள்ளனர்.
நடிகர் விஜய் சமீபத்தில் திமுக மாநாட்டில் பேசுகையில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டார். ஒன்று.. தான் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் போதே.. சினிமா உலகில் கோடிகளில் பணம் சம்பாதிக்கும் போதே.. அரசியலுக்கு வந்துள்ளேன் என்றார். அதேபோல் மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறீங்க. திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. அரசியல் எதிரி மட்டும்தான் எங்களுக்கு. ஆபாசம், அள்ளு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை . வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சுறாதிங்க. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள், என்று கூறி இருந்தார்.

இது இரண்டிற்கும் பதிலடி தரும் விதமாக நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்பி எம்எம் அப்துல்லா ஆகியோர் நடிகர் அஜித் குறித்து போஸ்ட் செய்துள்ளனர்.
திரைத்துறையில் கோலோச்சும் காலத்திலேயே: அதன்படி, எம்பி எம்எம் அப்துல்லா செய்துள்ள போஸ்டில், திரைத்துறையில் கோலோச்சும் காலத்திலேயே தன்னுடைய லட்சியமான கார் பந்தயங்களில் கலந்து கொண்ட அஜித் என்று குறிப்பிட்டு உள்ளார். அதில், திரைத்துறையில் கோலோச்சும் காலத்திலேயே தன்னுடைய லட்சியமான கார் பந்தயங்களில் கலந்துகொண்டு, கனவுகளுக்கு வேலை ஒரு இடையூறாக இருக்கக்கூடாது என இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாக விளங்குபவர் நடிகர் - கார் பந்தய வீரர் #AjithKumar சார். தற்போது 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் ( SDAT ) Logo-வை #AjithKumarRacing யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் அவர் காட்சிப்படுத்தியுள்ளது பாராட்டுதலுக்குரியது, பெருமைக்குரியது. ♥️, என்று குறிப்பிட்டு உள்ளார்.
திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்: விஜய் விமர்சனம் செய்த திராவிட மாடல் அரசு என்பதை குறிப்பிட்டு அஜித்தை பாராட்டி உள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை 'அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - #Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார்., என்று கூறி உள்ளார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications