பக்கா பிளானோடு இறங்கிய திமுக.. அண்ணாமலை சர்வரை முதல் நாளே தூக்கி.. பிதுங்கிய பாஜக.. எப்படி நடந்தது?
சென்னை: திமுகவினரின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிடும் முன் அவரின் இணைய பக்கத்தில் இருக்கும் தகவல்களை மொத்தமாக திமுகவினர் வெளியிட்டு அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
அண்ணாமலையின் ரபேல் வாட்ச் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அண்ணாமலை அளித்த விளக்கத்தில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன.
நான் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது.
அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.மேலும் இந்த பில்லை ஏப்ரல் மாதம் வெளியிடுவேன். அதேபோல் திமுகவினர் சொத்துக்கள் பற்றிய விவரங்களையும் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

ஆனால் இதுவரை அண்ணாமலை தனது பில் விவரங்களை வெளியிடவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை 4.40 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ரபேல் எடிஷன் பெல் அண்ட் ராஸ் வாட்சை வாங்கியது எப்படி என்ற கேள்வியை ஆளும் திமுக தரப்பு எழுப்பி உள்ளது.
உலகில் 500 வாட்சுகள் மட்டுமே இருக்கும் ரேர் கலெக்சனை எந்த பச்சை துண்டு போட்ட விவசாயி பத்து லட்சத்துக்கு வாங்குவார்? அப்போ நீங்க டுபாக்கூர் விவசாயியா? ரபேல் வாட்ச் நம்மளத் தவிர வேற யாரு வாங்குவாங்கன்னு சொல்றிங்க! ஆனா உலகில் யாரு வேணாலும் அந்த வாட்சை வாங்கலாம் என்பது உங்களுக்கு தெரியாதா?
மொத்த 500 வாட்ச்களில் ஒரு வாட்ச் எப்படி உங்களிடம் வந்தது என்பது தான் கேள்வி அதுக்கு பதில் சொல்லாமல், தத்தித் தனமாக உளறுகிறீர்களே ஏன்? பயமா?
ரபேல் விமானம் ஏதோ இந்தியாவிற்காகவே தயாரிக்கப்படும் 'சங்கி' விமானம் என்பது போல பேசி இருக்கிறீர்களே. ரபேல் விமானம் பிரான்ஸ், எகிப்து, கிரீஸ், கத்தாரில் பயன்பாட்டிலும் குரோஷியா, இந்தோனேசியா, UAE மற்றும் பல நாடுகள் வாங்கிவருவது உங்க சங்கி மூளைக்கு தெரியாதா?
500 லிமிட்டட் எடிசன் வாட்ச்களில் 149வது வாட்சை கட்டியிருப்பதாக பீற்றிக்கொள்பவரே. ரபேல் ஊழலை மறைக்க இந்த ரேர் கலெக்சன் உங்களுக்கு வழங்கப்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகளை திமுக அண்ணாமலைக்கு எழுப்பி இருந்தது.

இந்த நிலையில்தான் இன்று திமுக அமைச்சர்கள் தொடர்பான ஊழல் பட்டியலை வெளியிட வேண்டிய அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் சொத்து பட்டியலை வெளியிட இருக்கிறார். ஊழல் பட்டியலுக்கு பதில் அவர் சொத்து பட்டியலை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இதற்காக DMK FILES என்ற இணைய பக்கத்தையும் தொடங்கும் திட்டத்தில் உள்ளார். இன்று அந்த பக்கம் லைவாக வெளியாக உள்ளது. இந்த நிலையில்தான் திமுகவினரின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிடும் முன் அவரின் இணைய பக்கத்தில் இருக்கும் தகவல்களை மொத்தமாக திமுகவினர் வெளியிட்டு அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
DMK FILES என்ற இணைய பக்கத்தின் சர்வர் விவரங்களை திமுகவினர் "சிலர்" மூலம் அறிந்து கொண்டு, அதில் பதிவேற்றப்பட உள்ள மொத்த விவரங்களையும் பெற்று உள்ளனர். திமுகவினருக்கு எதிராக பதிவேற்றப்பட உள்ள பிடிஎப் கோப்புகள், புகைப்படங்கள் என்று அனைத்தையும் எடுத்து உள்ளனர்.
அதில் பெரிய அளவில் அதிர்ச்சி தரும் புகார்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. பெரும்பாலான தகவல்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பாத்திரத்தில் உள்ளவை என்று கூறப்படுகிறது.
இதை முன்பே தெரிந்து கொண்ட திமுகவினர் , அந்த விவரங்களை எல்லாம் அண்ணாமலை வெளியிடும் முன்பே திமுகவினர் வெளியிட்டு அண்ணாமலையை கிண்டல் செய்து கொண்டு இருக்கின்றனர்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications