ஏமாற்றமே மிச்சம்.. செந்தில் பாலாஜியை வைத்து அமலாக்கத்துறை ஆடிய ஸ்மார்ட் கேம்.. இனி வேற வழியே இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறை வழக்கிற்கு எதிராக ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு என்ன நினைத்தாலும் செந்தில் பாலாஜி சிறையில்தான் இருக்க வேண்டும். அந்த அளவிற்கு அவரை வைத்து அமலாக்கத்துறை கேம் ஆடி உள்ளது.

How did Enforcement Directorate play a dirty game at Supreme court against Senthil Balaji

செந்தில் பாலாஜி கைது; சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜாமீன் கேட்டு வழக்கு: இந்த அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் பிணை வழங்க கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடுத்து இருந்தார். செந்தில் பாலாஜி தொடுத்த மனு மீதான விசாரணையை இந்த வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

முதலில் அமலாக்கத்துறை இதில் மிகவும் தாமதமாக ஆவணங்களை கொடுத்தது. உதாரணமாக கடந்த 6ம் தேதி விசாரணையின் போது அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.,

இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது. எஎன்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார்.

இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது . தொடர்ந்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.. இதனால் நீதிபதிகள் பதில் மனுவை படிக்க கூட முடியவில்லை. இதனால் அப்போது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

,மீண்டும் ஒத்திவைப்பு: ஏற்கனவே 2 முறை வழக்கு ஒத்திக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு வழக்கை ஒத்திவைக்க கூடாது.. அதற்கு அனுமதிக்கவே கூடாது என்று செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும் வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் மே 15ம் தேதி.. அதாவது நேற்று விசாரணை செய்யப்படும் என்று கூறினர். மேலும் மே 15ம் தேதி.. அதாவது நேற்று நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளனர். ஆனால் நேற்று விசாரணை நடக்கவில்லை. மாறாக பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கோரிக்கை என்ன: நேற்று நடந்த விசாரணையில் பின்வரும் வாதங்கள் வைக்கப்பட்டன.

செந்தில் பாலாஜி: செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு இடைக்கலஜா ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்.

அமலாக்கத்துறை; மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் கூடாது. ஏற்கனவே அதை கோர்ட் நிராகரித்து உள்ளது. அதோடு மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்குவது ஆதாரத்தை கலைக்க காரணமாக அமையும்.

உச்ச நீதிமன்றம்: ஏற்கனவே 2-3 வருடங்கள் பிணை இல்லாமல் கைதிகளாக இருப்பவர்கள் உள்ளனர். வழக்கு விசாரணைக்கு வராமல் சிறையில் இருக்கும் பலர் உள்ளனர். எனவே இடைக்கால ஜாமீன் பற்றி உடனே முடிவு எடுக்க முடியாது. இன்று வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறினர்.

இன்று புதிய கேம்: இந்த நிலையில்தான் இன்று விசாரணையில் அமலக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளார். ஆனால் தற்போது அவர் வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. புதிதாக வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளார் என்று அமலாக்கத்துறை நிலைப்பாடு எடுத்தது.

செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து வழக்கை ஒத்திவைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்சம் நாளைய தினம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் கோடை கோடை விடுமுறை விடப்படும். இதனால் மே 15 ஆம் தேதி நிவாரணம் கிடைக்க வேண்டும். அப்போது பெயில் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டி இருக்கும்.

இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி ஜூலை 10ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+