எதிர்காலமே போயிடும்.. விடாத அப்பா "ராமதாஸ்".. விட்டுத்தந்த மகன் அன்புமணி.. பாஜகவை நிராகரிச்சிட்டாரே
சென்னை: அதிமுக - பாமக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த கூட்டணிக்கு பின் முக்கிய காரணமாக இருந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் இப்படி முடிவில் உறுதியாக இருக்க காரணம் என்கிறார்கள்.
அதிமுக - பாமக கூட்டணி பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுநாள் உறுதியாகும் என்கிறார்கள். 7 லோக்சபா தொகுதி கொடுக்க உறுதி ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் 1 ராஜ்ய சபா தொகுதி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

முதலில் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைத்தாராம். கிட்டத்தட்ட அடம் பிடித்தாராம். ஆனால் பாஜக கொடுத்த ஆபர் பாமகவிற்கு ஏற்றபடியாக இல்லை.
அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 4 லோக்சபா சீட் என்று பாஜக கூறியுள்ளாதாம். இதையடுத்து பாமக இறங்கி வந்து 10 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + அமைச்சர் பதவிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறி உள்ளதாம்.
அமைச்சர் பதவியில் உறுதி இல்லை: இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணிக்கு பின் முக்கிய காரணமாக இருந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் இப்படி முடிவில் உறுதியாக இருக்க காரணம் என்கிறார்கள்.
முதலில் இவர்தான் பாஜக அமைச்சர் பதவி தரவில்லை என்றால் ஏன் அவர்களுடன் நாம் கூட்டணி வைக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் வந்தாலும் அதில் நாம் பங்கு பெற மாட்டோம். எப்படியும் கூட்டணி கட்சிகளுக்கு பாஜக அமைச்சர் பதவி கொடுக்காது ., அப்படி இருக்க 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இப்போதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று பிடிவாதமாக ராமதாஸ் மகன் அன்புமணியிடம் கூறியுள்ளாராம்.
விடாத அப்பா "ராமதாஸ்".. விட்டுக்கொடுத்த அன்புமணி; முக்கியமாக ராமதாஸ் இதில் விடாப்பிடியாக அதிமுகதான் வேண்டும் என்று இருந்துள்ளார். என்ன நடந்தாலும் சரி கட்சியின் எதிர்காலம் முக்கியம். கடந்த சட்டசபை தேர்தலில் நாம் நல்ல வாக்கு பதிவு பெற்றோம்.
கட்சி எதிர்காலம்: அப்படி இருக்க பாஜகவோடு சேர்ந்து அதை இழக்க வேண்டாம். பாஜகவிற்கு தமிழ்நாட்டில் அத்தனை நல்ல பெயர் இல்லை. கூட்டணி வைத்து எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம் என்று அப்பா ராமதாஸ் மகன் ராமதாஸிடம் விடாப்பிடியாக பேசி உள்ளார். இதுதான் பாமக அதிமுக கூட்டணி செல்ல முக்கிய காரணம் என்கிறார்கள்.
தேர்தல் நிதி: மேலும் பாமக கேட்ட தேர்தல் நிதியை பாஜக கொடுக்கவில்லை என்கிறார்கள். நாங்கள் நிதி கொடுக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளதாம். அதிமுகவோ நாங்கள் இடம் கொடுக்கிறோம்.. நிதியும் கொடுக்கிறோம். சில தொகுதிகளில் மட்டும் நாங்களே உங்களுக்கு செலவு செய்கிறோம். மற்ற தொகுதிக்கு கையில் பணம் கொடுக்கிறோம் என்று கூறி பாமகவை சம்மதிக்க வைத்துள்ளதாம்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications