24 மணி நேரத்தில்.. அக்கா - தம்பியா? மனம் மாறிய சூர்யா - டெய்சி.. என்ன காரணம்? ஓ இதுதான் நடந்ததா?
சென்னை: வடிவேலை கன்னாபின்னவென திட்டிவிட்டு கடைசியில் "அது வந்துங்க அண்ணே" என்று மரியாதையாக ஒருவர் கூப்பிடுவது போல ஒரு காமெடி இருக்கும்.. அந்த காமெடிக்கு சற்றும் சளைக்காத ஒரு காமெடிதான் தமிழ்நாடு பாஜகவில் நடந்து உள்ளது.
அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் டெய்சி சரணை திட்டிய திருச்சி சூர்யா தற்போது டெய்சி சூர்யாவுடன் சமாதானம் ஆகி உள்ளார். 17 நாட்களுக்கு முன் நடந்த இந்த மோதலின் ஆடியோ 2 நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியானது.
இதுபற்றி விசாரிக்க அண்ணாமலை கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த விசாரணை தொடங்கிய 24 மணி நேரத்தில் இவர்கள் இருவரும் சமாதானம் ஆகி உள்ளனர். அப்படி பாஜகவில் என்னதான் நடந்தது?

மோதல்
திருச்சி சூர்யாவிற்கு - டெய்சி சரணுக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இந்த சண்டை நடந்து இருக்கிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. நீ எப்படி பதவி வாங்குன என்று தெரியும் என்று கூறி, அதோடு பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் அடிபட்டு உள்ளது. அதேபோல் நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை தீர்த்து காட்டுவேன் என்று பேசி உள்ளார்.

என்ன நடந்தது
இந்த சம்பவம் நடந்ததும் சூர்யாவிற்கு எதிரான புகாரை கட்சி ஒழுங்கு ஆணையம் விசாரணை செய்ய அண்ணாமலை உத்தரவிட்டார். இன்று அதற்கான ரிப்போர்ட்டை இவர்கள் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ஆடியோவையோ லீக் செய்ததது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஆடியோவை லீக் செய்தவர்கள் தொடர்பாக அண்ணாமலை விசாரணை செய்து வருகிறாராம். லீக் செய்தது யார் என்பது மட்டும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

விசாரணை
இந்த நிலையில் இந்த விவகாரம் பெரிதானதால் டெல்லி வரை தகவல் சென்றுள்ளது. டெல்லியில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கு விஷயம் தெரிந்து உள்ளது. அப்போது.. இப்பொது மேலிட தலைவர்கள் பிசியாக இருக்கிறார்கள். அவர்கள் குஜராத் விஷயத்தில் பிசியாக உள்ளனர். இந்த விவகாரத்தை இப்போதே முடித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பேசி விஷயத்தை முடித்துக்கொள்ளுங்கள். ஆனால் விவகாரம் பெரிதாக கூடாது. யாரும் தொலைக்காட்சி, ஊடகங்களில் தேவையின்றி இதை பற்றி கருத்து சொல்ல கூடாது. விவகாரத்தை சமாதானமாக முடியுங்கள் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

டெல்லி
பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. புதிதாக நிர்வாகிகள் கட்சியில் இணைகிறார்கள். முக்கியமாக பெண்கள் பலர் இணைகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் விஷயங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளனராம். கட்சியில் இருந்து யாரை நீக்கினாலும் களங்கம் போகாது. பாதிக்கப்பட்டவர் சமாதானமாக சென்று, சர்ச்சைக்கு உரியவர் விளக்கம் கொடுத்தால் மட்டுமே இந்த விஷயம் சரியாகும் என்ற அறிவுரையை மட்டும் மேலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பேசினார்கள்
இதையடுத்தே இரண்டு பேரையும் அழைத்து கட்சி நிர்வாகிகள் பேசி உள்ளனர். இரண்டுக்கும் இருக்கும் மோதல் என்ன, மோதலுக்கு என்ன காரணம் என்று பேசி உள்ளனர். அதை தொடர்ந்து சமாதானம் செய்து கொள்ளுங்கள் என்று முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் என்ன செய்தால் களங்கம் போகாது. இரண்டு பேரும் ஒன்றாக தோன்றி நாங்கள் சமாதானமாக சென்றுவிட்டோம் என்று கூறினால் மட்டுமே பிரச்சனை தீரும் என்று நிர்வாகிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதையடுத்தே இவர்கள் இருவரும் ஒன்றாக தோன்றி நாங்கள் அக்கா - தம்பியாக இருப்போம். யார் கண் பட்டதோ தெரியவில்லை. பிரச்சனை ஆகிவிட்டது. இனி கட்சிக்காக கடினமாக உழைப்போம் என்று தெரிவித்து உள்ளனர்.

நீக்கம்
அதே சமயம் சூர்யா தனது தவறை ஒப்புக்கொண்டுவிட்டார். அவர் பேசிய ஆடியோ உண்மைதான், அது அவரின் குரல்தான் என்று உறுதியாகிவிட்டது. இதையடுத்தே அண்ணாமலை அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார். 24 மணி நேரத்தில் இத்தனை சம்பவங்களும் நடந்து உள்ளன. இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் திருமதி டெய்சி சரண் அவர்களுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் திரு சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், திருப்பூரில் இன்று ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு முன் திரு சூர்யா சிவா மற்றும் திருமதி டெய்சி சரண் ஆகிய இருவரும் ஆஜராகி இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்தனர். அவர்கள் இருவரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து சகோதரிகளாக பயணிக்க சுமூகமாக சகோதர விரும்புவதாக ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடமும் பின் பத்திரிக்கையாளர்களிடமும் தெரிவித்தனர். நடந்தவை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல அவர்கள் விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும். பெண்களை தெய்வமாக போற்றும் கட்சி நமது பாரதிய ஜனதா கட்சி, என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications