வாய்ப்பே இல்லைன்னு சொன்னாங்களே.. அண்ணாமலை, முருகன் திடீர்ன்னு வேட்பாளர் ஆனது எப்படி? என்ன நடந்தது?
சென்னை; பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன், அண்ணாமலை இருவரும் பாஜகவின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இது தேசிய அளவில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் ஆகும்.
தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)_
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
எல் முருகன்: நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தொடக்கத்திலேயே தகவல்கள் வந்த நிலையில் அவர் போட்டியில்லை என்று திடீரென கடந்த மாதம் மறுக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன் மீண்டும் தேர்வானார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வானார்.
இதனால் அவர் லோக்சபா தேர்தலில் நிற்கவில்லை என்று செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். கோவை தேர்தலில் கண்டிப்பாக நிற்க மாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்து இருந்தார் பாஜகவின் அண்ணாமலை.

இது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை , எல் முருகன் ஆகியோர் கட்சி வளர்ந்துவிட்டதாக தொடர்ந்து பேசி வந்தனர். இப்படி இருக்க.. தற்போது தேர்தலில் நிற்காமல் பின்வாங்கி உள்ளனரே என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
போட்டியிடுவதாக அறிவிப்பு: இப்படி இருக்க பாஜக சார்பாக போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன், அண்ணாமலை இருவரும் பாஜகவின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
எப்படி வேட்பாளர்கள் ஆனார்கள்; இவர்கள் போட்டியிட டெல்லி தரப்பு விரும்பியதாக கூறப்படுகிறது. கட்சி வளர்ந்துவிட்டது. நீங்கள் போட்டியிடுங்கள். நீங்கள் களமிறங்கினால் வெற்றிபெறலாம். அதனால் போட்டி போடுங்கள்.
நீங்கள் களத்தில் இறங்கினால்தான் தொண்டர்களுக்கும் உற்சாகமாக இருக்கும் என்றும் பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எந்த கட்சியும் பாஜகவோடு கூட்டணி சேராததால் எல்.முருகன் ராஜ்யசபாவிலிருந்து தேர்வாகப்போவதாக கூறப்பட்டது. ஆனால் பாமக கூட்டணியால் கொஞ்சம் பயம் போய்விட்டதால் போட்டியிட்டு பார்க்கலாம் என முருகன், அண்ணாமலை ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளார்களாம்.
வேட்பாளர் லிஸ்ட்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வரிசையாக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக முதல் கட்டமாக அறிவித்தது. இந்தப் பட்டியலில், மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத்தின் காந்திநகரில் மீண்டும் களமிறங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவார்கள், ஸ்மிருதி இரானி 2019 இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அசத்தல் வெற்றியைப் பெற்றார். ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
28 பெண்கள், 50 வயதுக்குட்பட்ட 47 தலைவர்கள், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 57 பேர் என 34 மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 195 பேரில், 51 பேர் அனைத்து முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 20 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.
இரண்டாம் கட்ட லிஸ்ட்; இது போக 2024 மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை மார்ச் 13 அன்று வெளியிட்டது. அனுராக் தாக்கூர், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பசவராஜ் பொம்மை, பியூஷ் கோயல், அனில் பலுனி உள்ளிட்ட 72 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும், கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு!












Click it and Unblock the Notifications