எல்.முருகனுக்கு டெல்லி டாஸ்க்! கச்சிதமாக செஞ்சு முடிச்சிட்டாரே! எடப்பாடி எதிர்பார்த்திருக்க மாட்டாரு
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாமக - பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி அமைய காரணமாக இருந்தவர்களில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முக்கியமானவர்.
பாஜக - பாமக கூட்டணி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு உறுதியாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திக்கும் என்று பாமக அறிவித்துள்ளது.

நேற்று காலையில் இருந்து மாலை பாமக - அதிமுக கூட்டணியே உறுதியாகும் என்று தகவல்கள் வந்தன. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ஆஃபர் ஒன்றை பாமகவிற்கு கொடுத்ததாக செய்திகள் வந்தன.
இரண்டு நாட்களாக அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை.
அன்புமணியிடம் பேசுங்கள். நீங்கள் விரும்பும் தொகுதியை கண்டிப்பாக கொடுக்கிறோம் என்று அதிமுக சார்பாக பேசப்பட்டு இருக்கிறது. எடப்பாடி கொடுத்த இந்த ஆஃபர்தான் பாமகவை அதிமுக பக்கம் இழுத்துள்ளதாம்.
2026 தேர்தலில் அதிமுக கூட்டணி நல்ல பலன் தரும் என கட்சிகாரர்கள் சொல்கிறார்கள் என சொல்லி அதிமுக உடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்துள்ளதாம் . 7 லோக்சபா சீட், + தேர்தல் நிதி என்று அதிமுக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யவே சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்எல்ஏ அருள் சந்திப்பு நடத்தினாராம். எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் உள்ள சேலம் தொகுதியை கூட கொடுக்கிறோம். அதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்களே நில்லுங்கள். ஆனால் அதிமுக கூட்டணிக்கு மட்டும் வந்துவிடுங்கள் என்று எடப்பாடி கோரிக்கை விடுத்துள்ளாராம்.
இதை பாமகவும் ஏற்றுக்கொண்டு கூட்டணியை உறுதி செய்யும் முடிவில் இருந்ததாக தெரிகிறது.
பாஜகவினர் பேச்சு: ஆனால் அதற்குள் உள்ளே புகுந்து பாஜக டெல்லி தலைவர்கள் சிலர் பாமகவுடன் பேசி உள்ளனர். அன்புமணியிடம் பேசி கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர். இந்த கூட்டணி அமைய காரணமாக இருந்தவர்களில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முக்கியமானவர்.
எல் முருகனை டெல்லியில் இருந்த தலைவர்கள்தான் அனுப்பி வைத்து உள்ளனர். நீங்கள் கூட்டணியை பாமகவுடன் உறுதி செய்யுங்கள் என்று டெல்லி தலைவர்கள் எல் முருகனுக்கு டாஸ்க் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்தே எல் முருகன் பாமக தரப்பினரிடம்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. நீங்கள் எங்கள் கூட்டணியில் இருந்தால்.. பாமகவும் தேசிய அளவில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும். அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்க முடியாது. ஆனால் ஏதாவது அரசு அமைப்பில் உயர் பதவி அளிக்க தயாராக உள்ளோம்.
தேர்தல் நிதியை பார்த்துக்கொள்கிறோம் என்று எல் முருகன் சார்பாக பாமக தலைவர்களிடம் பேசப்பட்டு உள்ளது. எல் முருகனின் இந்த தொடர் பேச்சு காரணமாகவே பாமக - பாஜக இடையே கூட்டணி உறுதியாகி இருக்கிறதாம். பாமக தங்கள் கூட்டணிக்கு வரும் என்று ஆசையாக காத்திருந்த எடப்பாடிக்கு இந்த திடீர் திருப்பம் அதிர்ச்சியாக வந்து சேர்ந்துள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications