இது மன்னிப்பு போலவே இல்லை.. கண்டித்த உச்ச நீதிமன்றம்! சீமான் ஸாரி கேட்கும் முன்.. நடந்தது என்ன?
சென்னை: நடிகை பாலியல் புகார் வழக்கில் சீமான் மன்னிப்பு கோரி உள்ளார். நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன், நடிகைக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை வாபஸ் பெறுகிறேன் என்று கூறி சீமான் மன்னிப்பு கேட்டுள்ளார். சீமான் இந்த வழக்கில் மன்னிப்பு கேட்கும் முன் கோர்ட் அவருக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது. அதோடு அவரை கடுமையான விமர்சனமும் செய்து இருந்தது. இதையடுத்தே அவர் மன்னிப்பு கோரினார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. விஜயலட்சுமி தாக்கல் செய்த ஒரு வழக்கில், சீமான் அளித்த மன்னிப்பு மனு முறைப்படி இல்லாததால் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இதையடுத்தே இன்று அவர் மன்னிப்பு கோரினார்.

முன்னதாக, சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் "மன்னிப்பு" என்ற வார்த்தையே இடம்பெறாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சீமானுக்கு நீதிபதிகள் கேள்வி
சீமான் - விஜயலட்சுமி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு செய்யாவிடில், இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
நேற்று இந்த வழக்கில் வாதிட்ட விஜயலட்சுமி, சீமான் இப்போதும் தன்னைப்பற்றி தவறாகப் பேசி வருகிறார் என்று குற்றம் சாட்டினார். அவர் தாக்கல் செய்த மன்னிப்பு மனுவில் உண்மையான மன்னிப்பு இல்லை, மாறாக வன்மமே தெரிவதாக விஜயலட்சுமி தெரிவித்தார்.
சீமான் விஜயலட்சுமி வன்மம்
இதற்கு முன்பு, சீமான் விஜயலட்சுமியிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்றுக்கொண்ட சீமான் தரப்பு வழக்கறிஞர், விஜயலட்சுமியிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க சம்மதம் தெரிவித்தார்.
கடந்த வாரம் வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன.
திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து, தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சீமான் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி முன்பு குற்றம் சாட்டியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
சீமான் விஜயலட்சுமி மன்னிப்பு
அதேவேளையில், விஜயலட்சுமியும் சீமானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். சீமான் வழக்கு தொடுக்காத நிலையில், தாங்கள் மன்னிப்பு கேட்க முடியாது என்று அவர்கள் வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "சீமான் தரப்பிலிருந்து நீங்கள் பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதை எதிர்பார்த்தால், விஜயலட்சுமியும் பொதுவெளியில் சீமானைப் பற்றி ஆபாசமாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், சீமான் தரப்பிலிருந்து மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
சீமான் விஜயலட்சுமி வழக்கு
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் கொடுத்த வாக்குறுதிகள், அதன்பின் அவரை பற்றி பொதுவெளியில் தவறாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது கைதுக்கான தற்போதைய தடை நீக்கப்பட்டு, அவர் எந்தப் பாதுகாப்பும் இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
கைது செய்ய தடை இல்லை
அதாவது சீமானை கைது செய்ய உள்ள தடை நீக்கப்படும், அவர் கைது செய்ய அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டச் செயல்முறைக்கு விஜயலட்சுமி உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடிகையைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சீமான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
தவறாக பேச கூடாது
எதிர்காலத்தில் அந்த எதிர்காலத்தில் நடிகையை பற்றி தவறாக பேச கூடாது. இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீமான் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் நடிகை வழக்கை வாபஸ் வாங்கலாம் என்றும் இது நீதிக்கும் மரியாதைக்கும் உகந்த சமரசம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
சீமான் மீதான கைதுக்கான, விசாரணைக்கான இடைக்கால தடை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்று சீமானின் பதிலையும், அடுத்தகட்ட நடவடிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கும். தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நீண்டகால சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications