Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதை மறந்தாலும்.. இதை மறக்க கூடாது.. ஆட்டத்தையே மாற்றிய அந்த 2 பேர்.. சிஎஸ்கேவை வெல்ல வைத்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று குஜராத் அணிக்கு எதிராக கடைசியில் துபே - ஜடேஜா சிறப்பாக ஆடினாலும் மிடில் ஓவர்களில் இரண்டு பேரின் ஆட்டம் பெரிய அளவில் சிஎஸ்கேவிற்கு உதவியாக இருந்தது.

சிஎஸ்கே அணியில் இந்த சீசன் முழுக்கவே ஒரு சில வீரர்கள்தான் அணிக்காக தொடர்ந்து ஆடி வந்தனர். பொதுவாக சிஎஸ்கே கோப்பை வெல்லும் சீசன்களில் எல்லாம் ஒவ்வொரு போட்டியிலும் சிஎஸ்கே அணிக்காக ஒருவர் நன்றாக பேட்டிங் செய்வார் அல்லது பவுலிங் செய்வார்.

ஆனால் இந்த சீசனில் ஒரு சிலர் மட்டுமே பேட்டிங், பவுலிங்கில் தொடர் முழுக்க சிறப்பாக ஆடினார். ருத்துராஜ், கான்வே, ரஹானே, துபே ஆகியோர்தான் தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பாக ஆடினார்.

How did Rahane and Rayudu help CSK silently in IPL 2023 win against GT in Final?

இன்னொரு பக்கம் ஜடேஜா, சாகர், பத்திரனா ஆகியோர் பவுலிங்கில் சிறப்பாக ஆடி வந்தனர். இவர்களை தவிர மொயின் அலி, அம்பதி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் எதுவும் செய்யவில்லை. அதேபோல் பவுலிங்கிலும் இடையில் சிஎஸ்கே வீக்காக இருந்தது.

ஆனால் இதை எல்லாம் மீறித்தான் குஜராத் போன்ற மிக வலுவான அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே சிஎஸ்கே அணி அடித்து துவைத்து வீழ்த்தி உள்ளது.

சிஎஸ்கே வெற்றி:

குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக வென்று 2023 ஐபிஎல் சாம்பியன் ஆகி உள்ளது. 2023 ஐபிஎல் சீசன் திருவிழா போல நடந்து முடிந்துள்ளது. பல திருப்பங்களுடன், எதிர்பாராத வெற்றி தோல்விகளுடன் இந்த சீசன் நடந்து முடிந்துள்ளது. 2023 ஐபிஎல் சீசன் சாதாரண ஐபிஎல் என்பதை தாண்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் ஸ்பெஷல் ஐபிஎல் என்றுதான் கூற வேண்டும்.

நேற்று சிஎஸ்கே டாஸ் வெல்ல குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. 39 பந்துகள் பிடித்த சாகா 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அதிரடி குறையாமல் ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களை 47 பந்துகளில் எடுத்தார்.

8 சிக்ஸ், 6 பவுண்டரி என்று சிஎஸ்கே அணியை இவர் புரட்டி எடுத்தார். சிஎஸ்கேவில் கான்வே 47, ரஹானே 27 எடுக்க கடைசியில் டேஜா - துபே இருவரின் ஆட்டமும் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், ஜடேஜா ( 6 பந்தில் 15 ) மற்றும் சிவம் துபே ( 21 பந்தில் 32* ) எடுத்தனர்.இருவரின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

How did Rahane and Rayudu help CSK silently in IPL 2023 win against GT in Final?

மிடில் ஆர்டர்:

நேற்று குஜராத் அணிக்கு எதிராக கடைசியில் துபே - ஜடேஜா சிறப்பாக ஆடினாலும் மிடில் ஓவர்களில் இரண்டு பேரின் ஆட்டம் பெரிய அளவில் சிஎஸ்கேவிற்கு உதவியாக இருந்தது. மிடில் ஆர்டர்களில் ராயுடு, ரஹானே செய்த சம்பவம்தான் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

இந்த சீசனில் சரியாக பேட்டிங் செய்யாத ராயுடு கடைசி போட்டியில்.. அதுவும் ஓய்வு அறிவித்துவிட்டு ஆடும் போட்டியில் பேட்டிங் செய்த விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. வெறும் 8 பந்தில் 19 ரன்களை இவர் எடுத்து அசத்தினார். 2 சிக்ஸ், 1 பவுண்டரி என்று மிடில் ஓவர்களில் இவர் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

அதோடு தொடர் முழுக்க சிறப்பாக ஆடிய ரஹானே இன்றும் மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தார். 13 பந்தில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி என்று 27 ரன்கள் எடுத்தார். ஓவருக்கு கிட்டத்தட்ட 12 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இவர்கள் இருவரும் ஆடிய விதம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+