சைக்காலஜி.. சிஎஸ்கே பேட்ஸ்மென் திணறிய பிட்சில்.. ரஹானே மட்டுமே கூலாக ஆடியது எப்படி? இதுதான் சீக்ரெட்
சென்னை: நேற்று இந்த போட்டியில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் பலரும் திணற தொடக்கத்திலேயே ரஹானே கூலாக ஆடினார். ரஹானே இப்படி அதிரடி காட்டுவதற்கு பின் பல்வேறு சைக்காலஜி விஷயங்கள் உள்ளன என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 175/8 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172-6 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தேவன் கான்வாய் 50 ரன்கள் எடுக்க கடைசியில் தோனி 32, ஜடேஜா 25 என்று அதிரடி காட்ட சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே பேட்டிங்
நேற்று சிஎஸ்கே பேட்டிங் சொதப்பலாக இருந்தது. முக்கியமாக மிடில் ஆர்டரில், டெவோன் கான்வே (38 பந்துகளில் 50), ஷிவம் துபே (9 பந்துகளில் 8), மொயீன் அலி (10 பந்துகளில் 7) ரன்கள் எடுத்தனர். இவர்கள் வேஸ்ட் செய்த பந்துகள் சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பின.
நேற்று தோனி, ஜடேஜா தவிர யாரும் சரியாக ஆடவில்லை. ருத்து முதல் முறை சொதப்பி இருக்கிறார். கான்வே 38 பந்தில் 50 ரன்கள் எடுத்தாலும் அவரின் ஸ்டிரைக் ரேட் மிக மோசம். அதேபோல் ராயுடு, துபே, மொயின் அலி என்று வரிசையாக டாப் ஆர்டர் மொத்தமாக சொதப்பிவிட்டது. இதெல்லாம் தோல்விக்கு காரணமாக அமைந்தன.
ரஹானே
நேற்று இந்த போட்டியில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் பலரும் திணற தொடக்கத்திலேயே ரஹானே கூலாக ஆடினார். நேற்று பிட்ச் செல்ல செல்லத்தான் ஈரமாகி பேட்டிங் செய்ய சாதகம் ஆனது. ஆனால் அதில் கூட சிஎஸ்கே மிடில் ஆர்டர் சொதப்பியது. ஆனால் பிட்ச் ஈரமாகும் முன்பே நேற்று ரஹானே சிறப்பாக ஆடினார்.
19 பந்தில் 1 சிக்ஸ், 2 பவுண்டரி என்று அசால்டாக 31 ரன்கள் அடித்தார்.
ரஹானே இப்படி அதிரடி காட்டுவதற்கு பின் பல்வேறு சைக்காலஜி விஷயங்கள் உள்ளன என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள் . நம்மிடம் பேசிய கிரிக்கெட் வல்லுனர்கள் பகிர்ந்த சில தகவல்கள் பின்வருமாறு..
1. ரஹானே தற்போது டி 20 தேசிய அணியில் இல்லை. அவர் இனி எதையும் ப்ரூப் செய்ய வேண்டியது இல்லை. அதனால் சகஜமாக ஆடுகிறார்.
2. ஐபிஎல்லிலும் அவர் எதையும் சாதிக்க வேண்டியது இல்லை. அவருக்கு தொடர் வாய்ப்புகளும் கிடைக்காது. எங்கே சரியாக ஆடவில்லை என்றால் தூக்கி விடுவார்களோ என்ற பயம் இல்லை.சைக்காலஜி ரீதியாக இது அவருக்கு பலம்.
3. இதனால் அவரால் ஜாலியாக ஆட முடிகிறது. அப்படி ஜாலியாக ஆடும் பட்சத்தில் அவரால் எளிதாக சிக்ஸ், பவுண்டரி என்று அச்சமின்றி அடிக்க முடிகிறது.
4. சையது முஷ்டாக் கோப்பையில் இந்திய பிட்சிகளில் நன்றாக ஆடிய அனுபவம் உள்ளது.
5. ஸ்பின் பவுலிங்கை நன்றாக ஆடுவார் என்பதால் சேப்பாக்கத்தில் நன்றாக ஆடுகிறார்.
6.அவருக்கு இப்போது தன துணை கேப்டன் என்பது போன்ற பிரஷர் இல்லை.
7. சிஎஸ்கேவில் அவருக்கு என்று நல்ல சப்போர்ட் உள்ளது. அவரின் ரோலை விரும்புகிறார்.. உத்தப்பா. நெஹ்ரா போன்றவர்கள் சிஎஸ்கே திரும்பி பார்மிற்கு வந்ததும் அப்படித்தான்.
8. கவுண்டி தொடங்கி பல்வேறு லீக் ஆட்டங்களில் தரமான வேகப்பந்தை பார்த்தவர் என்பதால் அதையும் எளிதாக,ஜாலியாக எதிர்கொள்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications