எடப்பாடி பழனிசாமியின் இருக்கையில் அமர வேண்டிய செங்கோட்டையன், ஓ பன்னீர்செல்வம்.. தவறவிட்டது எப்படி?
சென்னை: எடப்பாடி பழனிசாமி இன்று அமர்ந்துள்ள அதிமுகவின் தலைமை பொறுப்பில் உண்மையில அமர வாய்ப்பு கிடைத்தவர்கள் என்றால் அது செங்கோட்டையன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தான். இருவருமே ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு விசுவாசமாக இருந்தவர்கள்.முதல் ஓ பன்னீர்செல்வத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. சசிகலா பதவியேற்புக்காக ராஜினாமா செய்தவர், அப்படியே அமைதியாக இருந்திருந்தால் கிடைத்திருக்கும். அதேபோல் செங்கோட்டையனும் கூவத்தூரில் முதல்வர்பதவிக்கான வாய்ப்பை ஏற்று இருக்கலாம். இருவருமே செய்த தவறால் இன்று வாய்ப்பை தவறவிட்டுள்ளார்கள்.
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில், விசுவாசத்திற்கும் செல்வாக்கிற்கும் பெயர்பெற்ற இரு பெரும் தலைவர்கள் இன்று தங்களின் அரசியல் அடையாளத்தை காப்பாற்றவே பெரும் போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி இன்று அனுபவிக்கும் அதே அதிகாரத்தை மிக எளிதாகப் பெற்றிருக்க வேண்டியவர்கள் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன். ஆனால் இருவருமே வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார்கள்.

பொறுமையின்மையால் ஓபிஎஸ் தவறவிட்ட வாய்ப்பு
ஓ. பன்னீர்செல்வம் தனது பொறுமையின்மையால் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டவர் ஓ பன்னீர்செல்வம். 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவின் பதவியேற்புக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தர்ம யுத்தம்
ஆனால் யாரோ சொன்னதை நம்பி ராஜினாமா செய்த சில நாட்களிலேயே "தர்மயுத்தம்" தொடங்கி சசிகலாவை எதிர்த்தார். ஒருவேளை அவர் சசிகலா சிறைக்குச் செல்லும் வரை அமைதியாகக் காத்திருந்திருந்தால், கட்சியின் சட்டவிதிகளின்படி அவரே முதலமைச்சராகத் தொடர்ந்து இருந்திருப்பார். எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு பெயர் முன்னுக்கு வர வாய்ப்பே இருந்திருக்காது. அதிகாரத்தை விட்டுக்கொடுத்ததும், பின்னர் அவசரமாக அதை மீட்டெடுக்க முயன்றதும் ஓ பன்னீர்செல்வம் செய்த சறுக்கல்.
செங்கோட்டையன் செய்த வரலாற்று பிழை
செங்கோட்டையனுக்கு 'கூவத்தூரில் சசிகலா கொடுத்த வாய்ப்பை மறுத்தது தான் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. காரணம்.. அதிமுகவின் அடிமட்டத் தொண்டன் வரை நன்கு தெரிந்த முகம் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமிக்கே அரசியலில் சீனியர் இவர் தான். கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருந்தபோது, முதலமைச்சர் பதவிக்கு சசிகலாவின் முதல் சாய்ஸ் செங்கோட்டையன் தான் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்தது.
முதல்வர் பதவி வேண்டாம்
ஆனால் கூவத்தூர் கூட்டத்தில் "எனக்கு முதல்வர பதவி வேண்டாம், கட்சி ஒற்றுமையாக இருந்தால் போதும்" என்று கூறி அந்த வாய்ப்பை அவரே மறுத்தார். அவருக்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஒருவேளை அன்று செங்கோட்டையன் முதல்வர் பதவியை ஏற்றிருந்தால், இன்று கொங்கு மண்டலத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் அவர் வசமிருந்திருக்கும். தலைமைப் பண்பு இருந்தும், அதை ஏற்கும் துணிச்சலை சரியான நேரத்தில் காட்டாதது அவர் செய்த வரலாற்றுப் பிழையால் செங்கோட்டையன் வாய்ப்பை தவறவிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி
இவர்கள் இருவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட இடத்தில், எடப்பாடி பழனிசாமி மிகச் சரியாகக் காய் நகர்த்தினார். சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டாலும், பின்னர் கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் போன்ற சீனியர்களையே ஓரங்கட்டும் அளவிற்குத் தன்னை வளர்த்தார்.
விசுவாசம்
விசுவாசம் என்பது அரசியலில் ஒரு முதலீடுதான், ஆனால் சரியான நேரத்தில் எடுக்கப்படும் அதிரடி முடிவுகளே அதிகாரத்தைத் தீர்மானிக்கும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி முன்னுதாரனம். ஓபிஎஸ் "அமைதி" இன்றி அவசரப்பட்டார்; செங்கோட்டையன் "அதிகாரம்" வேண்டாம் என்று ஒதுங்கினார். இன்று இவர்களின் அந்த ஒரு நிமிட முடிவுகள், அதிமுகவின் ஒட்டுமொத்தத் தலைமையையே எடப்பாடி பழனிசாமி வசம் கொண்டு சேர்த்துவிட்டது.
வாய்ப்பை பயன்படுத்துவது முக்கியம்
இப்போது ஓ பன்னீர்செல்வம் திமுகவில் சேர்ந்துவிட்டார். செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார். சின்னம்மா, சின்னம்மா என்று உருகியவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் போய்விட்டார்கள். அரசியலில் சத்ரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பதே சரி என்று சொல்வார்கள். அதனை சரியாக செய்தது எடப்பாடி பழனிசாமி தான். விஸ்வாசம், துரோகம் என்று அரசியலை பொறுத்தவரை எதுவும் இல்லை. வாய்ப்பை சரியாக பயன்படுத்தபவர்களே தலைவர்களாக முடியும்.. முழு தகவல்களை அறிய செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோவை பாருங்கள்
-
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
செங்கோட்டையன் உறவினருக்கு எல்லாம் சீட் இல்லை.. கடுகடுத்த எடப்பாடி.. அப்செட்டில் அதிமுக எம்எல்ஏ -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள் -
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications