1991ல் நடந்த மாயாஜாலம்.. தொழில், வளர்ச்சியில் வட இந்தியாவை தென்னிந்தியா முந்தியது எப்படி?
சென்னை: இந்தியா ஒரு வித்தியாசமான நிலப்பரப்புகள் கொண்ட நாடு, பல்வேறு வகையான கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனம் என எல்லாமே வித்தியாசமான பழக்க வழக்கம் கொண்ட நாடு. இங்கு 1991ல் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு தொழில், வளர்ச்சி, செல்வ வளம் என எல்லாவற்றிலும் வட இந்தியாவை தென்னிந்தியா முந்திவிட்டது எப்படி முந்தின என்பதை பார்ப்போம்.
இந்தியா என்பது பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம், உணவு முறை, பழக்க வழக்கம் என எல்லாவற்றிலும் வேறுபட்ட முறைகளை கொண்டவர்கள். கடவுள் வழிபாட்டு முறையில் தொடங்கி பல்வேறு விஷயங்களில் ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள். அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டது. இந்த 75 வருடத்தில் வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலங்களில் இந்தியாவில் மிகப்பெரிய செல்வ வளத்துடன், தொழில் வளச்சியில் முன்னேறிய இருந்த மாநிலங்கள் பல, சரிவை சந்தித்துள்ளன. அதேபோல் சில மாநிலங்கள் கடும் வறட்சி மற்றும் பின்தங்கிய நிலையில் இருந்து கல்வி வளர்ச்சி காரணமாக நாட்டின் முக்கியமான பொருளாதார சக்திகளாக உருவெடுத்துள்ளன. கடந்த 60 ஆண்டு வளர்ச்சி நிலை குறித்து பிரதமருக்குகான பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம்: இதன்படி பார்த்தால் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பின்தங்கி உள்ளன. பிரதமருக்குகான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 1960-61ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.4 சதவீத பங்களிப்பை கொண்டிருந்த நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம், 1990-91 வாக்கில், அதன் பங்களிப்பு 12.6 சதவீதமாகக் குறைந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரிந்த பிறகு, அதன் வளர்ச்சி விகிதம் அதைவிடவும் குறைந்துவிட்டது.
மேற்கு வங்கம்: இதேபோல், 1960களில் மேற்கு வங்கத்தின் பங்களிப்பு என்பது 10.5 சதவீதம் ஆக இருந்தது. இப்போது வெறும் 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஒரு காலத்தில் தேசிய சராசரியை விட அதிகமாக இருந்த மாநிலத்தின் தனிநபர் வருமானம், இப்போது அதை விட மிகமிக குறைவாக உள்ளது. இதேபோல் பசுமைப் புரட்சியால் பயனடைந்த பஞ்சாபிற்கு, அதன் பொருளாதாரம் மற்றும் அதன் தனிநபர் வருமானம் 1960-61ல் தேசிய சராசரியில் 119.6 சதவீதத்திலிருந்து 1970-71ல் 169 சதவீதமாக உயர்ந்தது . ஆனால் அதன் பிறகு கிடுகிடுவென சரிந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பஞ்சாப் பங்கு 1970-71ல் 4.4 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023-24ல் 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தென்னிந்தியா: அதே நேரம் இதற்கு நேர்மாறாக கல்வி வளரச்சி காரணமாக தென்னிந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. 1991ல் பொருளாதார தாராளமயமாக்கல் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, தென் மாநிலங்கள், புதிதாக கிடைத்த ஐடி துறை, ஆட்டோ மொபைல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்து கைப்பற்றி முன்னேறின. இப்போது நாட்டின் முன்னணி வளர்ந்த மாநிலங்களாக தென்னிந்திய மாநிலங்கள் தான் உள்ளன, உண்மையில், 2023-24ல், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தைக் கொண்டிருக்கின்றன.
மகாராஷ்டிரா குஜராத்: அதேநேரம் வட இந்தியாவில் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்தாலும், மேற்கு இந்தியாவில் நிலைமை வேறாக இருக்கிறது. மேற்கு மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் 1990க்கு பிறகு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் நாட்டின் முக்கியமான மாநிலங்களாக உருவெடுத்துள்ளன .
ஐடி துறை: தென்னிந்தியாவை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய அளவில் முன்னணியில் உள்ளன . தொழில்துறையின் வருடாந்திர ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் தென்னிந்திய மாநிலங்கள் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருக்கின்றன. எனினும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதி மாவட்டங்கள் தென் மாநிலங்களிலும் மற்றும் மேற்கு மாநிலங்களில் அமைந்திருக்கின்றன.
வரி வருவாய்: இப்படி முன்னேறிக் கொண்டிருக்கும் தென் மாநிலங்களுக்கு அவர்கள் தரும் வரியுடன் ஒப்பிடும் போது, குறைவான நிதியே மத்திய அரசிடம் இருந்து திரும்ப கிடைக்கிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. 11வது நிதி ஆணையத்தின் (2000 முதல் 2005 வரை) காலத்தில் 21.1 சதவீதத்திலிருந்த நிதி பகிர்வு, இப்போது 15.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நிதி பகிர்வு குறைவு: அதேநேரம் 15வது நிதி ஆணைய நிதி பகிர்வின் படி(2021-26). உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரிகளில் அதிக பங்குகள் தரப்படுகிறது மத்திய அரசு தான் இந்த மாநிலங்களை வளர்ச்சி அடைய தேவையான திட்டங்களுக்கு நிதி உதவிகைளை அள்ளி வழங்கி வருகிறது. மேலும் உதவியுடன் மானியங்களையும் தந்து வருகிறது. பணக்கார மாநிலங்களில் கிடைக்கும் நிதியை ஏழை மாநிலங்களுக்கு தருவது மத்திய அரசின் பார்வையில் சரியானது தான் என்றாலும். , வரி வருவாயில் தென் மாநிலங்களின் பங்கு குறைந்து வருவது சமீப ஆண்டுகளில் மத்திய-மாநில உறவுகளில் விரிசலை அதிகப்படுத்தி வருகிறது.
மக்கள் தொகை அடிப்படை: ஏனெனில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காகவே நிதி குறைப்பு தண்டனை கிடைத்துள்ளதாக தென்னிந்திய மாநிலங்கள் கவலை அடையும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஏனெனில் மக்கள் தொகை அடிப்படையில் தான் நிதி பகிர்வு உள்ளதே இதற்கு காரணம். இதேபோல் இன்னொரு விஷயமும் தென்னிந்திய மாநிலங்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அது என்னவென்றால், மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதி எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
லோக்சபா எம்பிக்கள்: இதனால் தென்னிந்திய மாநிலங்களில் வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மக்கள் தொகை குறைவு என்பதால், தென்னிந்தியா மாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும். இது நிதி பகிர்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தென்னிந்திய மாநிலங்கள் அச்சத்தில் உள்ளன. அதேநேரம் புத்திசாலித்தனமாவும், தொலைநோக்கு பார்வையுடன் இந்த பிரச்சனையை மத்திய அரசு தீர்க்காவிட்டால், மிகப்பெரிய சிக்கல்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பபாக இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் சமநிலைக்கும், அதன் ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்!











Click it and Unblock the Notifications