டெஸ்டில் வென்ற உதயநிதி.. சத்தமின்றி முடிக்கப்பட்ட "அசைன்மென்ட்".. குஷியான ஸ்டாலின்? என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் ஆசிய கோப்பை போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறையில் மேற்கொண்ட முதல் மிகப்பெரிய நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதியான நேற்று நடந்து முடிந்தது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் பெரிய வெற்றிபெற்றது போலவே இந்த தொடரையும் உலக நாடுகள் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு நடத்தி முடித்துள்ளனர்.

அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறைக்கு வந்த பின், அவர் தலைமையில் நடந்த முதல் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இதனால் இதை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளனர். முக்கியமாக உலக நாடுகள் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஹாக்கி தீமில் இந்த தொடர் நடத்தப்பட்டு உள்ளது.
மாற்றப்பட்ட சாலைகள்: அதன் ஒரு கட்டமாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக சென்னையை மொத்தமாக அழகுபடுத்தும் திட்டத்தில் சென்னை பெருநகர ஆணையம் களமிறங்கி பணி செய்தது. இதற்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் அருகே உள்ள காந்தி இர்வின் சாலையை அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அருகே இருக்கும் சாலைகளையும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பகுதியை நோக்கி செல்லும் சாலைகள் அனைத்தையும் தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் மூலம் முடுக்கிவிடப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இந்த தொடர் தற்போது எந்த பிரச்சனையும் இன்றி சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த தொடரை உதயநிதியின் விளையாட்டுத்துறை சிறப்பாக நடத்தி முடித்துள்ளதாக அரசு நிர்வாகிகள் தரப்பும், மேலிடமும் கருதுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஆசிய ஹாக்கி கோப்பை அசைன்மென்டை உதயநிதி முறையான திட்டமிடலுடன் நடத்தி முடித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலினும் கருதுவதாக கூறப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறையில் மேற்கொண்ட முதல் மிகப்பெரிய நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கை: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.8.2023) சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற 7-வது "ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 சென்னை" பரிசளிப்பு விழாவில் மாண்புமிகு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் அவர்கள் முன்னிலையில் ஆசிய ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்கி இந்திய அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து, வாழ்த்தினார். மேலும் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
7-வது "ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 சென்னை" போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை, மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்திய இப்போட்டியில், இந்தியா சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் (Upgraded Hockey Stadium). ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் (Olympic Standard New Synthetic Turf) மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் (Kalaignar Centenary Pavilion) ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28.7.2023 அன்று திறந்து வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் 20.7.2023 அன்று மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் "ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 சென்னை" போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்து, "பொம்மன்" இலச்சினையை வெளியிட்டார். மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் பாஸ் தி பால்" கோப்பை (PASS THE BALL TROPHY TOUR) சுற்றுப்பயணத்தையும் தொடங்கி வைத்தார்.
"பாஸ் தி பால் கோப்பை" சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று 1.8.2023 அன்று சென்னை வந்தடைந்தது. இந்த கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திரு. முகமது தயப் இக்ராம் அவர்கள் 2.8.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் சென்னை, எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில், நடைபெற்ற "ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை சென்னை 2023" இறுதிப் போட்டியில் இந்தியா - மலேசியா நாடுகளுக்கிடையேயான ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்து, இரு அணிகளின் தலைவர்கள். வீரர்கள் மற்றும் நடுவர்களை வாழ்த்தி போட்டியினை பார்வையிட்டார்.
பின்னர், "ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023" இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெற்றிக் கோப்பையை வழங்கி, இந்திய அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து வாழ்த்தினார். இந்த விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். ரகுபதி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் திரு. முகமது தயப் இக்ராம், ஹாக்கி இந்தியா தலைவர் டாக்டர் திலீப் திர்கி, பொதுச் செயலாளர் திரு போலா நாத் சிங், பொருளாளர் திரு. சேகர் ஜெ. மனோகரன், செயல் இயக்குநர் காமாண்டர் திரு.ஆர்.கே. ஸ்ரீவஸ்தவா, ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் நிர்வாகி திரு. தைமூர், சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கிராண்ட் மாஸ்டர் திரு விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications