ஸ்டாலின் வீட்டுக்கே போக கூடியவர்! பாஜகவை காங்கிரஸ் புரட்டி எடுக்க காரணமாக இருந்த மாஸ்டர்மைண்ட்! யார்

Subscribe to Oneindia Tamil

சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தியின் திட்டமிடல், பிரச்சாரம், தேர்தல் பணிகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த எழுச்சி இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒன்று.. இந்த எழுச்சிக்கு பின் தமிழர் ஒருவரும் முக்கிய காரணமாக இருந்தார்!

2014, 2019 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு காங்கிரஸ் சரியாக திட்டமிடவில்லை. பெரிய முயற்சிகளை செய்யவில்லை, காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு டப் பைட் கொடுக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. மோடி என்ற இமேஜுக்கு எதிராக வலுவான மாற்று வாதத்தை வைக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன.

lok sabha election 2024 2024

முகம் மாறிய காங்கிரஸ்; ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் அப்படி இல்லை. இரண்டு கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை முடித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்ட பிரச்சாரம் பெரிய அளவில் கவனம் பெற்றது. வேட்பாளர் தேர்வு தொடங்கி பிரச்சார யுக்தி, களப்பணி வரை எல்லாவற்றிலும் இந்த முறை காங்கிரஸ் டாப் நாட்ச் என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றியோ, தோல்வியோ காங்கிரஸ் இதுவரை இல்லாத எழுச்சியுடன் போட்டியிட்டு இருக்கிறது.

முக்கியமாக அகிலேஷ் யாதவ், மு க ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் என்று மாற்று கட்சி தலைவர்களுடன் இணைந்து ராகுல் காந்தி செய்த பிரச்சாரங்கள் பெரிய கவனம் பெற்றன. மோடியின் பேச்சுக்கு உடனுக்குடன் வீடியோ போட்டு பதிலடி, கையில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தோடு பிரச்சாரம், கையில் அம்பேத்கார் படத்தோடு பிரச்சாரம் என்று ஒரு திராவிட கட்சி போல முழு மூச்சாக பாஜகவை எதிர்த்து காங்கிரசுக்கு புது முகம் கொடுத்து இந்த முறை ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.,

எழுச்சி : அங்கே காங்கிரஸ் கட்சியின் இந்த அபார எழுச்சிக்கு அவர்களின் முறையான திட்டமிடல் மற்றும் வியூகங்கள் காரணம் ஆகும். களத்தில் மேற்கொண்ட பிரச்சாரம், சமூக வலைதள பிரச்சாரம், முறையாக திட்டமிட்டு காய் நகர்த்தியது, பத்திரிகைகளில் முறையாக விளம்பரம் கொடுத்தது என்று காங்கிரஸ் கட்சி பாஜகவை இந்த தேர்தலில் திக்கி திணற வைத்தது. வெற்றியோ தோல்வியோ காங்கிரஸ் சிறப்பாக சண்டை செய்தது.

இதற்கெல்லாம் காரணம் அங்கே கட்சி தேர்தல் ஆலோசகராக நியமித்து இருந்த சுனில் கணகூலுதான். திட்டங்களை வகுத்த பலரில் இவரும் ஒரு காரணம். ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளை தெரிந்த சுனில் பிரபல அரசியல் ஆலோசகர் ஆவார். தமிழ் மற்றும் ஆந்திரா பூர்வீகத்தை கொண்டவர்.

யார் இவர்: அரசியல் ஆலோசகராக பல கட்சிகளுக்கு பணியாற்றி வந்தவர்.. காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்ற சென்று அங்கு முழு நேர உறுப்பினர் ஆகிவிட்டார். பிரஷாந்த் கிஷோர் போல் இல்லாமல் சுனிலை ஊடகங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ பார்க்க முடியாது. காங்கிரஸின் 2024 தேர்தல் பணிக்குழுவின் முக்கிய ,மாஸ்டார்மைன்ட். மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 39 வயதான சுனில் மிகவும் வித்தியாசமானவர். I-PAC இன் பிரஷாந்த் கிஷோரை போல இல்லாமல் இவர் மிகவும் அமைதியானவர், அரசியல் சார்பு அற்றவர். ஆனால் இந்த முறை காங்கிரஸ் உறுப்பினராகவே சேர்ந்து விட்டார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்த முறை காங்கிரசுக்கு வெற்றியை தேடிக்கொடுத்த சுனில் ஏற்கனவே தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணிகளை செய்து அங்கேயும் வெற்றிக்கு காரணமானதால் லோக்சபா தேர்தலில் பணிகளை செய்ய ஒப்பந்தம் ஆனார். மிகவும் அமைதியான இவர்.. காங்கிரசில் சேர்ந்தது கூட பலருக்கும் தெரியாது.

பிரஷாந்த் கிஷோர் கோபம்: இவர் மீது உள்ள கோபம் காரணமாகி பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் தோற்கும் என்று கொழுத்தி போடுவதாக கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கூட இவரை பார்த்தது இல்லை. காங்கிரஸ் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் பெரும் பகுதியை திட்டமிட்டது, ராகுல் என்ன செய்ய வேண்டும் என்று பிளான் செய்தது எல்லாமே சுனில்தான்.

தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று 2024 வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறார். பிரஷாந்த் கிஷோர் போல இல்லாமல் சுனில் நேரடியாக அனைத்து பணிகளையும் செய்ய கூடியவர். கட்சி நிர்வாகிகளுக்கு நேரடியாக ஆலோசனைகளை வழங்க கூடியவர். 2014க்கு முன்பு இவரும் பிரஷாந்த் கிஷோரும் சேர்ந்து பணியாற்றி அதன்பின் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக மோதல்: 2016ல் திமுகவிற்கு, கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கும் வேலை பார்த்தார். இரண்டிலும் கட்சிகள் தோல்வி அடைந்தாலும் நல்ல இடங்களை பெற்று எதிர்கட்சியானது. இதில் சுனில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. ஒரு காலத்தில் ஸ்டாலினின் வீட்டிற்கு அப்பாயின்மென்ட் வாங்காமல் செல்லும் அளவிற்கு நெருக்கமாக இருந்தவர் மனக்கசப்பில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு வேலை பார்த்துவிட்டு அதன்பின் காங்கிரசில் இணைந்தவர் தற்போது ராகுலின் லெப்ட் ஹேண்டாக இருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரசின் PayCM , ByeBYeBjp போன்ற பிரச்சாரங்களை இவர்தான் உருவாக்கியது. இவரின் தாயார் தெலுங்கு, அப்பா தமிழ் - கன்னடா. சரியாக சொல்ல வேண்டுமென்றால் திராவிடர்!

இவர் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில். அமெரிக்கா செல்லும் வரை பெரும்பாலும் சென்னையில் படித்தவர். இளங்கலை பட்டதாரியாக பொறியியல் படித்தார். அவர் இரண்டு முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார் - நிதியில் எம்எஸ் மற்றும் எம்பிஏ படித்துள்ளார். 2009ல் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார் 2014 வரை பிரசாந்த் கிஷோருடன் பணியாயற்றியவர்..

2018 - 19ல் சில காலம் அமித் ஷாவிற்காக டெல்லியில் தேர்தல் பிரச்சாரங்களை கவனித்துக்கொண்டார். இப்படிப்பட்ட சுனில் வகுத்த பிரச்சார யுக்திகள், பாரத் ஜோடா யாத்திரை திட்டங்கள்தான் காங்கிரசின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+