ரூ.1000 உரிமை தொகைக்கு விண்ணப்பித்த.. பெண்களுக்கு ஷாக்! மெசேஜால் குழப்பம்.. விசாரித்தால் மேலும் ஷாக்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் திருப்பூரில் நடக்கும் மோசடி ஒன்றை தமிழ்நாடு அரசு கண்டுபிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 14ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெண்களில் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. எல்லா மாதமும் 15ம் தேதி வைக்கப்படும். ஆனால் கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ம் தேதி வைக்கப்பட்டது.
முதல் மாத தொகை: முதல் மாதமும் பலருக்கும் முதல் நாளே.. அதாவது 14ம் தேதியே பணம் வரவு வைக்கப்பட்டது. இதற்காக பெண்களிடம் ஏற்கனவே இருக்கும் வங்கி கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டது.

இவர்கள் எல்லோருக்கும் வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் எல்லோருக்கும் பணம் அனுப்பப்பட்டது. 1.70 கோடி பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து இருந்தனர். முன்கூட்டியே தொகை: தற்போது வரை இந்த திட்டத்திற்கு 1.064 கோடி பேர் இந்த திட்டத்தில் தேர்வாகி உள்ளனர். இதில் வங்கி கணக்கில் சிக்கல் உள்ள சிலருக்கு நேரடியாக மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான் இரண்டாம் மாத தொகை மீண்டும் அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும் முறையீடு: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். உரிமை தொகை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு நவ.25 முதல் எஸ்.எம்.எஸ் அனுப்பபடும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தங்கள் பெயரை சேர்க்கக் கோரி அக்.25 வரை 11.85 லட்சம் பேர் மேல் முறையீடு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேல் முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கியதாக என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
( 12ம் தேதி தீபாவளி.. இந்த மாதம் முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமை தொகை? எப்போது தெரியுமா )
முறைகேடு: இந்த நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் திருப்பூரில் நடக்கும் மோசடி ஒன்றை தமிழ்நாடு அரசு கண்டுபிடித்துள்ளது.
திருப்பூர் மாநகரில் உள்ள சாயா பட்டரை தெருவில் உள்ள பல பெண்களின் ஆதார் மற்றும் பான் விவரங்களைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு நடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த பெண்களின் விவரங்களை பயன்படுத்தி போலியான ஜிஎஸ்டி சான்றிதழ்களை உருவாக்கி அதை வைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக ஒரு கோடீஸ்வரர் ஜிஎஸ்டி கட்ட விரும்பாமல்.. தனது கம்பனி வருமானத்தை வேறு வேறு பான் கார்டுக்கு மாற்றி கணக்கு காட்டி.. தனக்கு குறைவான வருமானம் வருவது போல ஏமாற்றலாம்.
தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்களின் விவரங்களை வைத்து அவரின் பெயரில் பொய்யான நிறுவனங்களை உருவாக்கி.. அதற்கு கொஞ்சம் வருமானத்தை மடைமாற்றி விட்டு.. அதன் மூலம் கூடுதல் வரி செலுத்துவதை தவிர்க்க இந்த முறைகேட்டை செய்துள்ளனர்.
கலைஞர் உரிமைத்தொகை திட்டம்: இதைத்தான் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் கண்டுபிடித்துள்ளது. கலைஞர் மகள் உரிமை தோகைக்கு (KMUT) விண்ணப்பித்த பெண்களுக்கு, 50 லட்சம் அளவிற்கு சொத்துக்கள் இருப்பதாகவும், அவர்கள் ஜிஎஸ்டி செலுத்தியதாகவும் பான் கார்டு விவரம் தெரிவித்துள்ளது. இந்த பெண்கள் ஜிஎஸ்டி செலுத்தியதால் கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
மாதம் 10 ஆயிரம் கூட வருமானம் வாங்க எல்லோரும் ஏன் ஜிஎஸ்டி கட்டுகிறார்கள் என்று விசாரித்த போது அந்த முறைகேடு வெளியே வந்துள்ளது. இது தொடர்பாக வரும் நாட்களில் மேலும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.,


Click it and Unblock the Notifications
