கள்ளக்குறிச்சி கலவரம்.. வாட்ஸ் ஆப்பில் பேசியது என்ன? காரணம் யார்? போனை "பிடுங்கிய" போலீஸ் -பின்னணி
சென்னை: கள்ளக்குறிச்சி கலவரம் வாட்ஸ் ஆப்பில் திட்டமிடப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து வாட்ஸ் ஆப் அட்மினை கைது செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Recommended Video
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது. பலியான மாணவிக்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களையும் வைத்தது.
போராட்டம் செய்தவர்களை கண்டுபிடியுங்கள். தனிப்படை அமையுங்கள். போராட்டக்காரர்களை கைது செய்தால் மட்டும் போதாது. அவர்கள் கையில் சட்டங்களை எடுக்க கூடாது. போலீஸ் யார் கட்டுப்பாட்டிலும் இருக்க கூடாது என்று நீதிமன்றம் இன்று கடுமையாக தெரிவித்தது.

என்ன சொன்னது?
அதோடு நீங்கள் சட்டத்தை சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். நான் டிவியில் அனைத்தையும் பார்த்தேன். உங்கள் உளவுத்துறை அறிக்கை எங்கே? கைது செய்தால் மட்டும் போதுமா? சமூக வலைத்தளங்களில் தனியாக விசாரணை நடத்துகிறார்கள். . இந்த கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்ட குற்றம். வாட்ஸ் அப் குரூப் அட்மினை கைது செய்ய தமிழக டிஜிபிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்கும். இதில் எடுக்கப்படும் ஆக்சன் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும், என்று குறிப்பிட்டனர்.

வாட்ஸ் ஆப்
இந்த கலவரம் வாட்ஸ் ஆப்பில் திட்டமிடப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து வாட்ஸ் ஆப் அட்மினை கைது செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கலவரம் முழுக்க முழுக்க வாட்ஸ் ஆப்பில் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ட்விட்டரில் அந்த மாணவிக்கு நீதி கேட்டு பலரும் டிரெண்ட் செய்தனர். இதில் வடஇந்தியர்கள் பலரும் இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஆனால் ட்விட்டர் மூலம் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த போராட்டம் வாட்ஸ் ஆப் மூலம் திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது

உளவுத்துறை சோதனை
. உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞரும் இதை இன்று கோர்ட்டில் தெரிவித்தார். போலீஸ் வட்டார தகவல்களின்படி, மொத்தம் 500 பேர் பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களை தொடங்கி அதில் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் போராட்டங்களை செய்ய முடிவு செய்துள்ளனர். மாணவ அமைப்புகள் சாதாரணமாக போராட்டம் செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ரோட்டில் சோதனை
இந்த நிலையில்தான் நேற்று கலவர இடத்தில் இருந்து வந்த இளைஞர்கள் பலரை போலீசார் மறித்தனர். அவர்களின் போனை பிடுங்கி வாட்ஸ் ஆப்களை சோதனை செய்தனர். இதில் பல முக்கிய விவரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த போராட்டம் முறையாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளது. கட் அவுட் எல்லாம் அடித்து வந்துள்ளனர். அதேபோல் டிராக்டர் எல்லாம் உள்ளே கொண்டு வந்துள்ளனர். இது கண்டிப்பாக மக்கள் எழுச்சி போராட்டம் கிடையாது என்று போலீஸ் தரப்பு கருதுகிறதாம்.

பைக் நம்பர்
நேற்று கலவரம் செய்தவர்களில் 330 பேர் வரை தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலரை போலீசார் பைக் நம்பர் மூலம் கைது செய்யப்பட உள்ளனர். இந்த கலவரத்தை யார் திட்டமிட்டு இருந்தாலும் அவர்கள், இனியும் கலவரம் பற்றி யோசிக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் கலவரக்காரர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications