Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நானி முதல் என்டிஆர் வரை.. மொத்த தெலுங்கு இன்டஸ்ட்ரியும் சமந்தா பின் திரண்ட அதிசயம்.. தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு திரை உலகின் டாப் நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் சமந்தா பின் திரண்டு வந்து அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா நடிகை சமந்தா குறித்து பேசிய விஷயங்கள் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளன. அமைச்சர் கேடி ராமராவ் இதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார். பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமராவ் நடிகை சமந்தாவை படுக்கைக்கு அழைத்ததாக தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.

samantha naga chaitanya cinima

தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா அளித்த பேட்டியில் தெலுங்கு சினிமாவில் பெண்கள் பலர் விரைவாக திருமணம் செய்ய கே.டி.ராமராவ்தான் காரணம். அவரால் பயந்து கொண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பெண்களையும் அவர் விடவில்லை.

சமந்தா வேண்டும் என்று கே.டி.ராமராவ் கேட்டார். அதற்கு நாகார்ஜுனா ஒப்புக்கொண்டார். ஆனால் இதற்கு சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் சாய் அக்கினேனியை விவாகரத்து செய்தார். வீட்டு ஆண்களுக்கு போதை பொருள் கொடுப்பது கே.டி.ராமராவ் வழக்கம். அவர்களை அடிமையாக்கி.. அவர்கள் வீட்டில் இருக்கும் நடிகைகளை கேட்பதுதான் கே.டி.ராமராவ் ஸ்டைல் என்று கோண்டா சுரேகா அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

சமந்தா பக்கம் திரண்ட மக்கள்: இந்த விவகாரத்தில் தெலுங்கு திரைப்பட உலகம் மொத்தமாக சமந்தா பக்கம் நின்றுள்ளது. சமந்தாவிற்கு ஆதரவாக தெலுங்கு திரைப்பட உலகின் டாப் ஸ்டார்கள் கூடி உள்ளனர். உதாரணமாக தெலுங்கு திரை உலகின் முன்னணி ஸ்டார் ஜூனியர் என்டிஆர் செய்துள்ள போஸ்டில், கோண்டா சுரேகா அவர்களே, தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுக்கு இழுப்பது ஒரு மோசமான தாழ்வு. பொது நபர்கள், குறிப்பாக உங்களைப் போன்ற பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், தனியுரிமைக்கு கண்ணியத்தையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும். குறிப்பாக திரையுலகைப் பற்றி ஆதாரமற்ற அறிக்கைகள் கவனக்குறைவாக தரப்படுவது வருத்தமளிக்கிறது.

மற்றவர்கள் எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும்போது நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நாம் இதை விட உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உள்ள எல்லைகளை மதிக்க வேண்டும். ஜனநாயக இந்தியாவில் இத்தகைய பொறுப்பற்ற நடத்தையை நமது சமூகம் ஏற்றுக்கொள்ள கூடாது என்பதை உறுதி செய்வோம், என்று முன்னணி ஸ்டார் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நானி, அரசியல்வாதிகள் எப்பேர்ப்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. உங்கள் வார்த்தைகள் மிகவும் பொறுப்பற்றதாக இருக்கும்போது உங்களை எப்படி நம்ப முடியும். உங்கள் மக்களுக்காக உங்களுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பது எங்களின் முட்டாள்தனம்.

இது நடிகர்கள் அல்லது சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இது எந்த அரசியல் கட்சிக்கும் பொருந்தாது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளை பேசுவது மிக தவறு. நீங்கள் செய்வது எல்லாம் சரி என்று நினைப்பதும் சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும், என்று நானி குறிப்பிட்டு உள்ளார்.

இது போக.. தெலுங்கு திரை உலகின் டாப் நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் சமந்தா பின் திரண்டு வந்து அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+