சாதகம்! தவெக விஜய் கேட்ட சின்னம் என்ன? விசில் சின்னம் கிடைத்தது எப்படி? டெல்லி தந்த கிரீன் சிக்னல்!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. இந்த சின்னம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடி இருந்தது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 இன் விதிகளின் கீழ் தங்களுக்கு ஒரு தேர்தல் சின்னத்தை ஒதுக்கக் கோரி இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) செவ்வாய்க்கிழமை மனு அளித்தது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சின்னம்
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முதல் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது வேட்பாளர்களுக்கான பொதுத் தேர்தல் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) அணுகி இருந்தார். TVK இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், விசில், ஆட்டோ ரிக்ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலுடன், தேர்தல் சின்னங்கள் ஆணை, 1968-இன் கீழ், விண்ணப்பத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் சமர்ப்பித்தார். இந்த சின்னம் விவகாரத்தில் "டெல்லி" விஜய்க்கு எதிராக கேம் ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விஜய் தரப்பிற்கு அவர்கள் கேட்ட சின்னமே கொடுக்கப்பட்டு உள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படியில் இந்த சின்னம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விசில் சின்னத்திற்கு முக்கியத்துவம்
'விசில்' சின்னத்திற்கே கட்சி அதிக முக்கியத்துவம் அளித்து கட்சி தரப்பு அந்த மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தது.. அது 2019ஆம் ஆண்டு விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்துடன் தொடர்புடையது. எளிமையான, மக்கள் சுலபமாகத் தொடர்புபடுத்தக்கூடிய, விரைந்து வாக்காளர்களைச் சென்றடையக்கூடிய சின்னமே கட்சிக்குத் தேவை என்று விஜய் கருதுவதாக கூறப்படுகிறது. . சமர்ப்பிக்கப்பட்ட 10 சின்னங்களில், ஏழு புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் இலவசச் சின்னங்கள்; மூன்று, சுயமாக உருவாக்கப்பட்டவை ஆகும்.
பேரணிகளின் போது தொண்டர்களிடையே எடுத்துச் செல்லவும், விநியோகிக்கவும் எளிதாக இருக்கும் என்பதால், விசில் தவெகவிற்கு சாதகமாக இருக்கும். இதனால் அதை கேட்டு தவெக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பொதுச் சின்னங்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.
விசில் சின்னம் ஒதுக்கீடு
இதையடுத்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னம் தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜய்க்கு இந்த சின்னத்தை தேர்வு செய்ய சொன்னது அவரின் ஆஸ்தான ஜோசியர் என்று கூறப்படுகிறது.
அரசியல் ஆலோசகர்கள் இது குறித்து நம்மிடம் பேசுகையில், விசில் சின்னம் சுவரில் வரைவதற்கும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் தெளிவாகத் தெரிவதற்கும் எளிதாக இருப்பதால், பிரச்சார ரீதியாகச் சிறப்பாகச் செயல்படும். ன்னங்கள் வேட்பாளர் பெயர்களைப் போலவே முக்கியம். அங்கீகாரம், மக்கள் இடையே எளிதாக சென்று சேர்வது, பார்த்தவுடன் தெரிவது ஆகியவை வாக்குப்பதிவு நாளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.. அந்த வகையில் விசில் சின்னம் விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்று கூறி உள்ளனர்.
வடிவமைப்பின் எளிமையும், பார்வைப் புலப்படும் தன்மையும் வாக்காளர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும்.. முக்கியமாக விசில் சின்னம் இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பலருக்கும் பிரபலமான சின்னம்.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!












Click it and Unblock the Notifications