ஆதிவாசிகள் வாழும் சென்டினல் தீவுக்கு.. அமெரிக்கர் சென்றது எப்படி? மதம் பரப்ப சென்றாரா? ஷாக் பின்னணி
சென்னை: உலகின் தனித் தீவான தடை செய்யப்பட்ட சென்டினல் தீவுக்குள் நுழைந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த அமெரிக்க இளைஞர் அங்கே மதம் மாற்ற சென்றாரா? எப்படி உள்ளே நுழைந்தார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
விதிகளை மீறி உள்ளே சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞரை, அந்தமான் போலீசார் கைது செய்துள்ளனர். கையில் தேங்காய், கோகோ கோலா பானத்துடன் படகில் சென்று அங்கு இறங்கியவர், பழங்குடிகள் யாரும் வராததால் பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு கொஞ்சம் மண் எடுத்துவிட்டு திரும்பியுள்ளார். அந்தமானில் உள்ள சென்டினல் தீவு உலகின் மர்மமான தீவுகளில் ஒன்று. இங்கு வசிக்கும் சென்டினேலீஸ் மக்கள், தங்களை உலகின் பிற மக்களிடம் இருந்து பிரித்து, தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 12 ஆயிரம் வருடமாக அவர்கள் அங்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2018ம் வருடம் அங்கு செல்ல முயன்று போது ஜான் ஆலன் என்ற அமெரிக்கர் கொலை செய்யப்பட்டார். அப்போது அவர் சென்டினேலீஸ் மக்களால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை சென்டினேலீஸ் மக்கள் மூன்று நாட்கள் வைத்து துன்புறுத்தி இருக்கிறார்கள். அதன்பின் அவரை கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக அங்கு சென்றார் என்று செய்திகள் வந்தது. கிறிஸ்துவ மிஷனரி ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்த ஜான், கிறிஸ்துவ மதம் குறித்து அந்த சென்டினேலீஸ் மக்களிடம் பிரச்சாரம் செய்ய அங்கு சென்றார். கொல்லப்பட்ட அவரின் உடல் இன்னும் அந்த தீவில்தான் இருக்கிறது. சென்டினல் தீவின் கடற்கரையில்தான், ஜானை சென்டினேலீஸ் மக்கள் புதைத்து இருக்கிறார்கள். அதை மீட்க முடியவில்லை.
இன்னொரு இளைஞர் கைது
இந்த நிலையில் இந்த வாரம் சென்டினல் தீவுக்குள் நுழைந்த மைக்கைலோ விக்டோரோவிச் பாலியாகோவ் என்ற இன்னொரு இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். மார்ச் 31 அன்று சிஐடியால் கைது செய்யப்பட்ட மைக்கைலோ விக்டோரோவிச் பாலியாகோவ் (24), எந்த அனுமதியும் இல்லாமல் வடக்கு சென்டினல் தீவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மார்ச் 26 அன்று போர்ட் பிளேருக்கு வந்து குர்மா தேரா கடற்கரையிலிருந்து வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த அமெரிக்க இளைஞர் அங்கே மதம் மாற்ற சென்றாரா? எப்படி உள்ளே நுழைந்தார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அவர் மார்ச் 29 அன்று அதிகாலை 1 மணியளவில் குர்மா தேரா கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் சென்றுள்ளார். சென்டினலிஸ்களுக்கான பிரசாதமாக ஒரு தேங்காய் மற்றும் கோலா கேனை எடுத்துச் சென்றார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
எப்படி சென்றார்?
பாலியகோவ் காலை 10 மணிக்கு வடக்கு சென்டினல் தீவின் வடகிழக்கு கரையை அடைந்தார். பைனாகுலரை பயன்படுத்தி, அவர் அப்பகுதியை ஆய்வு செய்தார், ஆனால் அங்கே சென்டினல் மக்கள் யாரும் இல்லை. அவர் ஒரு மணி நேரம் கடலில் இருந்து கவனத்தை ஈர்க்க விசில் அடித்தார், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை .யாரும் அவரை தேடி வரவில்லை. காலை நேரத்தில் அங்கே பொதுவாக மக்கள் இருப்பார்கள். ஆனால் அன்று யாரும் வரவில்லை.
அவர் சுமார் ஐந்து நிமிடங்கள் அங்கே இருந்தார். கடைசியில் யாரும் வரவில்லை என்பதால் கரையில் காணிக்கைகளை விட்டுவிட்டு, மணல் மாதிரிகளை சேகரித்தார், மேலும் தனது படகில் திரும்புவதற்கு முன்பு ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளார்.
மதியம் 1 மணியளவில், அவர் தனது பயணத்தைத் தொடங்கி, இரவு 7 மணியளவில் குர்மா தேரா கடற்கரையை அடைந்தார். அங்கு உள்ளூர் மீனவர்களால் அவரைக் பார்த்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரைப் பற்றியும், பழங்குடியினப் பகுதிக்குச் அவர் செல்ல காரணம் என்ன என்பது குறித்தும் கூடுதல் விவரங்களைப் பெற்று வருகிறோம். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அவர் தங்கியிருந்த போது வேறு எங்கு சென்றார் என்பதைத் தேட முயற்சித்து வருகிறோம். போர்ட் பிளேயரில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஒரு படகு மற்றும் ஒரு மோட்டார் இருந்தது. சில புத்தகங்கள் இருந்தன. இதை பற்றி விசாரித்து வருகிறோம். அந்த அமெரிக்க இளைஞர் அங்கே மதம் மாற்ற சென்றாரா? எப்படி உள்ளே நுழைந்தார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது, என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
குர்மா தேரா கடற்கரையிலிருந்து கடல் எப்படி இருக்கும், அலைகள் எப்படி இருக்கும் மற்றும் இரவு நேரத்தில் எப்படி பயணம் செய்வது போன்றவற்றை ஆய்வு செய்த அவர் தனது பயணத்தை மிக நுணுக்கமாகத் திட்டமிட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் தனது பயணம் முழுவதும் ஜிபிஎஸ்ஸை பயன்படுத்தி திட்டமிட்டுள்ளார்.
உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த பாலியகோவ் ஒரு GoPro கேமரா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அதன் காட்சிகள் அவர் வடக்கு சென்டினல் தீவில் இறங்கியதை உறுதி செய்துள்ளது. அவர் தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications